Monthly Archives: November 2011

சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில், பெரிச்சிகோயில்

அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில், பெரிச்சிகோயில், கண்டரமாணிக்கம் வழி, சிவகங்கை மாவட்டம்.

+91- 4565 – 255 373, 94866 71544, 97863 67380.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுகந்தவனேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் சமீபவல்லி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் கிணறு
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் பெரிச்சிகோயில்
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியை மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னர் ஆட்சி செய்து வந்தார். ஒருசமயம், ஒரு போரில் வெற்றி பெற்றார். அதற்கு காணிக்கையாக, சிவனுக்கு கோயில் கட்ட விரும்பினார். அவருக்கு எந்த இடத்தில் கோயில் கட்டுவதென குழப்பம் ஏற்பட்டது. அவரது கனவில் தோன்றிய சிவன், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு இலிங்கம் இருக்குமெனவும், அங்கேயே கோயில் எழுப்பலாம் என்றும் சொன்னார். குறிப்பிட்ட அந்த இடத்தில் இலிங்கத்தைக் கண்ட மன்னர் கோயில் எழுப்பினார். வாசனை மிக்க மலர்கள் நிறைந்த வனத்தின் மத்தியில் எழுந்தருளியவர் என்பதால் சுவாமி, “சுகந்தவனேஸ்வரர்என்று பெயர் பெற்றார்.

சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில், திருமணஞ்சேரி

அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில், திருமணஞ்சேரி, புதுக்கோட்டை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பரிமளேஸ்வரர்
தீர்த்தம் கிணற்று நீர்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருமணஞ்சேரி
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

இத்தலம் ஒரு காலத்தில் ராஜராஜ வளநாடு என அழைக்கப்பட்டது. இங்கு வசித்த வணிகர் ஒருவருக்கு அழகான மகள் இருந்தாள். இவளை மதுரையில் வசித்த தன் தங்கை மகனுக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்தார் வணிகர். ஆனால், அவன் இன்னொரு பெண்ணை காதலித்து திருமணமும் முடித்து விட்டான். இவ்விஷயம் தெரிந்தும், தங்கை மகனுக்கே மகளைக் கொடுப்பதென்ற முடிவில் இருந்தார் வணிகர். பெற்றவர் பேச்சை மீறாத அந்த பெண்ணும், கடவுள் சித்தப்படி நடக்கட்டும் என விட்டுவிட்டாள். தினமும் தங்கள் ஊரிலுள்ள சுகந்த பரிமளேஸ்வரர் கோயிலுக்கு சென்று, சுவாமியையும், பெரியநாயகி அம்பாளையும் வணங்கி வந்தாள். காலம் சென்றது.

அப்பெண்ணின் பெற்றோர் இறந்து விட்டனர். அனாதையான அவள் பரிமேளஸ்வரர் சன்னதிக்கு சென்று அழுதாள். இறைவன் அவளுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து உதவ முடிவெடுத்தார். அவர் முதியவர் வடிவில் அங்கு வந்து, அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூற வந்த அவளது முறைப்பையனிடம், “அவள் உனக்காகவே பிறந்தவள். நீ இன்னொரு திருமணம் செய்திருந்தாலும் கூட, ஆதரவற்றவளாய் நிற்கிறாள். எனவே, நீயே அவளைத் திருமணம் செய்து கொள்என்றார். அவன் அவளுக்கு அவ்விடத்திலேயே மாலை சூடினான்.