Monthly Archives: October 2011

அம்மநாதர் திருக்கோயில், சேரன்மகாதேவி

அருள்மிகு அம்மநாதர் திருக்கோயில், சேரன்மகாதேவி, திருநெல்வேலி மாவட்டம்

+91- 4634 – 265 111, +91- 94422 26511.

காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அம்மநாதர்(அம்மையப்பர்)
அம்மன் ஆவுடைநாயகி(கோமதியம்பாள்)
தல விருட்சம் பலா மரம்
தீர்த்தம் தாமிரபரணி
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சேரன்மகாதேவி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

சிவதரிசனம் பெற விரும்பிய உரோமச முனிவர், அகத்தியரின் ஆலோசனைப்படி தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை இட்டார். அதில் இரண்டாவது மலர் இத்தலத்தில் கரை ஒதுங்கியது. இங்கு, உரோமசர் இலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார்.

அமரபணீஸ்வரர் திருக்கோயில், பாரியூர்

அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில், பாரியூர், ஈரோடு மாவட்டம்.

+91- 4285 – 222 010, 222 080.

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அமரபணீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் சவுந்திரநாயகி
தல விருட்சம் மகிழம்
தீர்த்தம் கிணற்று நீர்
ஆகமம் காரணாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பழம்பெரும்பதி
ஊர் பாரியூர்
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

தேவர்களை தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி எனும் மூன்று அசுரர்கள் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். தேவர்களால் அசுரர்களை எதிர்க்க முடியவில்லை. எனவே, அவர்கள் சிவனை சரணடைந்து தங்களை அசுரர்களிடம் இருந்து காத்தருளும்படி வேண்டினர். சிவன் தன்னை வேண்டி தவம் செய்யும்படி கூறினார். அதன்படி தேவர்கள் இவ்விடத்தில் இலிங்கத்தை பிரதிட்டை செய்து, சிவனை வேண்டி தவமிருந்து வழிபட்டனர். அவர்களுக்கு காட்சி தந்த சிவன், அசுரர்களை அழித்து தேவர்களை காத்தருளினார். தேவர்களுக்காக அசுரர்களை அழிக்கும் பணியைச் செய்த சிவன் என்பதால், “அமரபணீஸ்வரர்என்ற பெயரும் பெற்றார்.