Monthly Archives: October 2011

அர்ச்சுனேஸ்வரர் கோயில், கடத்தூர்

அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் கோயில், கடத்தூர், கோவை மாவட்டம்

காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

இறைவன்: அர்ச்சுனேஸ்வரர்

அம்மன் : கோமதியம்மை

விக்கிரம சோழன் ஆட்சிக்காலத்தில் காரத்தொழுவு என்ற கிராமத்தில் இருந்து கொங்கேலசங்கு என்ற கிராமத்திற்கு தினமும் 60 குடம் பால் சென்றுகொண்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குடம் பால் மட்டும் சிந்தியது. அந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது ரத்தம் பெருக்கெடுத்து அமராவதி ஆற்றில் கலந்து இரத்த ஆறாக மாறிவிட்டது. பயந்துபோன மக்கள் அவ்விடத்தை ஆராய்ந்துபார்த்தனர். பால் விழுந்த இடத்தைத் தோண்டியபோது உள்ளே ஒரு சிவலிங்கம் இருந்தது. அதன் தலையில் வெட்டுப்பட்டிருந்தது. இப்போதும் இந்த லிங்கத்தின் தலையில் வெட்டுக்காயம் இருக்கிறது. சுயம்பு இலிங்கமாக வெளிப்பட்ட சிவபெருமான் இத்தலத்தில் எழுந்தருளினார். பத்தாம் நூற்றாண்டில் இந்த கோயில் எழுப்பப்பட்டது.

அறப்பளீஸ்வரர் திருக்கோயில் , கொல்லிமலை

அருள்மிகு அறப்பளீஸ்வரர் திருக்கோயில் , கொல்லிமலை சேலம் மாவட்டம்.

+91- 94422 76002, 97866 45101

காலை 7 மணி முதல் 1 மணி வரை, பகல் 2.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். திருவிழா நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.

மூலவர் அறப்பளீஸ்வரர்
அம்மன் தாயம்மை, அறம்வளர்த்தநாயகி
தீர்த்தம் பஞ்சநதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் கொல்லிமலை
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

இறை வழிபாடு மேற்கொண்ட சித்தர்கள், தவம் செய்யத் தேர்ந்தெடுத்த இடங்களில் ஒன்று கொல்லிமலை. அவர்கள் இங்கு ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்தனர். தர்மத்தை (அறம்) பின்பற்றிய சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இவருக்கு, “அறப்பளீஸ்வரர்என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் இந்த இடம் விளைநிலமாக மாறி சிவலிங்கம் மறைந்துவிட்டது. விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, கலப்பை ஓரிடத்தில் சிக்கிக்கொண்டது. அங்கு தோண்டிய போது இலிங்கம் இருந்ததைக் கண்ட விவசாயி ஊர் மக்களிடம் தெரிவித்தார். மக்கள் மலையில் கிடைத்த இலை, தழைகளால் பச்சைப்பந்தல் அமைத்து சிவனை பூஜித்தனர். பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.