Monthly Archives: October 2011

அருள்மிகு தழுவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், படப்பை

அருள்மிகு தழுவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், படப்பை, காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 99414 37183

காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தழுவக்கொழுந்தீஸ்வரர் (தழுவக்குழைந்தீஸ்வரர்)
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் காமாட்சி
தல விருட்சம் மாமரம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மேல்படப்பை
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

கைலாயத்தில் ஒருசமயம் சிவனின் கண்களை, பார்வதி விளையாட்டாக மூடவே, உலக இயக்கம் நின்றது. இதனால் கோபம் கொண்ட சிவன், அம்பிகையை பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறக்கும்படி சபித்து விட்டார். வருந்திய அம்பிகை சிவனிடம், சாபத்திற்கு விமோசனம் கேட்டாள்.
பெருமானும் கருணையுடன், தென்திசையில் விளங்கும் காஞ்சி என்ற புண்ணிய பூமியில், கம்பா நதிக்கரையில் மாவடியில் தமது இருக்கையுள்ளது எனவும், அங்கு சென்று வழிபடுமாறும், அப்போது தாம் வெளிப்பட்டு அம்பிகையை ஆட்கொள்வதாகவும் அருளினார்.

அகிலாண்டநாயகியும் அவ்வாறே காஞ்சிக்குச் சென்று, அனுதினமும் கம்பா நதியில் திருமஞ்சன நீர் எடுத்து மெய்யன்புடன் சிவாகம முறைப்படி பூஜைகள் செய்தார். இதனைக் கண்ட ஸ்வாமி திருவுள்ளம் மகிழ்ந்து, தன்மீது அம்பாள் கொண்டுள்ள பக்தியை வெளியுலகுக்கு எடுத்துக்காட்ட, சிறு திருவிளையாடல் புரிந்தார்