Monthly Archives: October 2011

அருள்மிகு திருவுடை நாயகி சமேத திருவுடைநாதர் கோயில், மணலி

அருள்மிகு திருவுடை நாயகி சமேத திருவுடைநாதர் கோயில், மணலி, வட சென்னை.

காலை 6 மணி முதல் 10.30 மணி வரையிலும்; மாலை 5.30 முதல் 8.30 வரை திறந்திருக்கும்.

திரு என்றால் செல்வம் என்று பொருள். தங்களது பெயரிலேயே திருவைக் கொண்டுள்ள இறைவனும், இறைவியும்; தங்களை வழிபடும் பக்தர்களின் வாழ்வில் திருவுக்குக் குறைவராமல் பார்த்துக்கொள்ளும் தலம், சென்னை மணலியில் அமைந்துள்ளது.

பழமைமிக்க இவ்வாலயம், விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவானது என்பதை, கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் ஆலயம், திருவெற்றியூர்

அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் ஆலயம், திருவெற்றியூர், இராமநாதபுரம் மாவட்டம்.

திருமாலுக்கு வெற்றி கிடைக்க வழி செய்த தலம்தான் திருவெற்றியூர்.

வரலாறு : ஒருங்கிணைந்த சேர, சோழ, பாண்டிய நாட்டை மாவலிச் சக்கரவர்த்தி ஆண்டு வந்தான். அவனுக்கு, மக்களிடத்தில் அமோக செல்வாக்குப் பெருகியது. இதனால் மன்னனின் மனதில் ஆணவம் தலைதூக்கத் தொடங்கியது. இறைவனையும் தேவர்களையும் மதிக்காமல் வாழத் தொடங்கினான்.