Category Archives: விருதுநகர்

அருள்மிகு வைகுண்ட மூர்த்தி திருக்கோயில், கோட்டையூர்

அருள்மிகு வைகுண்ட மூர்த்தி திருக்கோயில், கோட்டையூர், சுந்தரபாண்டியம், விருதுநகர் மாவட்டம்.

காலை 6 மணி முதல், மாலை மணி 5 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வைகுண்டமுர்த்தி
அம்மன் பூரண, புஷ்கலா
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கோட்டையூர்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா சுந்தரபாண்டியத்தில் பெரியகோயில் என்றழைக்கப்படும் வைகுண்ட மூர்த்தி சுவாமி கோயிலில் தர்மசாஸ்தாவாகவும், அய்யனாராகவும் இருவேறு உருவங்களில் எழுந்தருளி அப்பகுதி மக்களை காத்து வருகிறார். வைகுண்டமூர்த்தி சுவாமி கோயில் கி.பி. 1620ம் ஆண்டில் தற்போதைய சுந்தரபாண்டியம் பகுதியை ஆட்சி செய்து வந்த மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டு வரலாற்றுச் சிறப்புடன் திகழ்கிறது. இக்கோயிலில், அந்த மன்னனின் கலை நயத்தை வெளிப்படுத்தும் அழகிய சிற்ப ஓவியங்கள் இன்னும் அவனது புகழை பறைசாற்றும் வகையில் எழிலுற அமைந்துள்ளன.

இங்கு முக்கியத் திருவிழா பாரி வேட்டை. துஷ்டசக்திகளை வேரறுக்கவும், தன்னைச் சுற்றி சார்ந்துள்ள துஷ்ட தேவதைகள், 21 சேனை தளங்களுக்கு இரணபலி வழங்கவும் வருடம் ஒரு முறை அய்யனார் வேட்டைக்குச் செல்வதாக ஐதீகம். இதற்காக நடத்தப்படும் பாரிவேட்டை திருவிழா இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், திருத்தங்கல்

அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், திருத்தங்கல், விருது‌நகர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கருநெல்லிநாதர் (சொக்கப்பன்)

அம்மன்

சொக்கி

தலவிருட்சம்

கருநெல்லி

தீர்த்தம்

அர்ச்சுனாநதி

பழமை

1000 வருடங்களுக்கு முன்

புராணப்பெயர்

திருத்தங்கால்

ஊர்

திருத்தங்கல்

மாவட்டம்

விருதுநகர்

மாநிலம்

தமிழ்நாடு

இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதி ஆறுமுகத் தம்பிரான் என்னும் முருக பக்தரால் அமைக்கப்பட்டுள்ளது. இவர் ஆண்டுதோறும் பழனிக்கு சென்று தண்டாயுதபாணிக் கடவுளை தரிசிப்பது வழக்கம். தள்ளாத வயதில் ஒரு சமயம் பாதயாத்திரை‌ மேற்கொண்ட போது குறுக்கிட்ட வாய்க்காலை கடக்க முடியாமல் அங்கேயே தங்கி இறைவன் கட்டளைப்படி பூஜை செய்தார். பூஜை செய்ய அடுப்பு மூட்டக் குழி தோண்டிய போது தங்கத் காசுகள் கிடைக்க முருகனருளால் கிடைத்த அக்காசுகளை வைத்து முருகனுக்கே கோயில் கட்டினார். பழனி முருகன் போல் திருத்தங்கல் பழனியாண்டி அருள் சக்தி கொண்டவராய் இப்பகுதி மக்களால் ‌‌கொண்டாடப்படுகிறார்.