அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், திருத்தங்கல்
அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், திருத்தங்கல், விருதுநகர் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
கருநெல்லிநாதர் (சொக்கப்பன்) |
அம்மன் |
– |
|
சொக்கி |
தலவிருட்சம் |
– |
|
கருநெல்லி |
தீர்த்தம் |
– |
|
அர்ச்சுனாநதி |
பழமை |
– |
|
1000 வருடங்களுக்கு முன் |
புராணப்பெயர் |
– |
|
திருத்தங்கால் |
ஊர் |
– |
|
திருத்தங்கல் |
மாவட்டம் |
– |
|
விருதுநகர் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதி ஆறுமுகத் தம்பிரான் என்னும் முருக பக்தரால் அமைக்கப்பட்டுள்ளது. இவர் ஆண்டுதோறும் பழனிக்கு சென்று தண்டாயுதபாணிக் கடவுளை தரிசிப்பது வழக்கம். தள்ளாத வயதில் ஒரு சமயம் பாதயாத்திரை மேற்கொண்ட போது குறுக்கிட்ட வாய்க்காலை கடக்க முடியாமல் அங்கேயே தங்கி இறைவன் கட்டளைப்படி பூஜை செய்தார். பூஜை செய்ய அடுப்பு மூட்டக் குழி தோண்டிய போது தங்கத் காசுகள் கிடைக்க முருகனருளால் கிடைத்த அக்காசுகளை வைத்து முருகனுக்கே கோயில் கட்டினார். பழனி முருகன் போல் திருத்தங்கல் பழனியாண்டி அருள் சக்தி கொண்டவராய் இப்பகுதி மக்களால் கொண்டாடப்படுகிறார்.
பஞ்சபாண்டவர்கள் பதிமூன்று ஆண்டுகள் வனவாசம் செய்த போது மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான சதுரகிரி மலைக்காடுகளில் சில காலம் தங்கி இருந்தனர். அக்காலத்தில் தினசரி காலை மாலை நீராடி இறைவனை பூசனை செய்ய நீர் ஊற்று காணாது வருந்தியபோது, அதிகாலை வேளையில் சூரியன் உதிக்கும் வேளையில் கங்கா தேவியை நினைத்து வணங்கி, தன்னுடைய அம்பினால் பூமியைப் பிளக்க புனிதநீர் கொப்பளித்து பூமியெங்கும் பரவி ஓடியது. பஞ்சபாண்டவர்கள் அந்த புனித நதிகளில் நீராடி பூஜைகள் முடித்து மகிழந்தனர். அந்த நதியே அர்ச்சுனா நதி எனும் புண்ணிய நதியாகும். இந்த புண்ணிய நதியில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம். மலை மீது அமைந்துள்ள இக்கோயில் மிகவும் பழமையானது. திருத்தங்கல் ஊரின் பெருமை சங்க கால இலக்கியமாம் இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்திலும் சிறப்பிக்கப்படுகிறது. பழனியில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் அருள் பாலிப்பது போல் இங்கு அதே கோலத்தில் காட்சியளிக்கிறார்.
திருவிழா:
சித்திரை மாதம் – சித்திரை திருவிழா– 11 நாட்கள். திருக்கார்த்திகை திருவிழா – பழநியாண்டிக்கு பெருவிழா.
பௌர்ணமி தோறும் மீனாட்சி அம்மனுக்கு திருவிளக்கு பூஜை. பிரதோசம் தோறும் சுவாமிக்கு புறப்பாடு. செவ்வாய் தோறும் துர்க்கைக்கு அபிசேகம், ஆராதனை. தவிர பவுர்ணமி, அமாவாசை, பிரதோச நாட்கள், தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும்.
வேண்டுகோள்:
செவ்வாய் வெள்ளி ஆகிய நாட்களில் வழிபட்டால் திருமணம் கைகூடுகிறது. பிரதோசம் தோறும் இந்த ஆலயம் வந்தால் பிணிகள் நீ்ங்குகிறது. பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டால் மாங்கல்ய பலம் பெருகும். கார்த்திகையில் முருகனைக் கண்டால் விதியின் வேகம் குறைந்து வாழ்க்கை வளமாகிறது.
நேர்த்திக்கடன்:
முருகனுக்கு முடி இறக்குதல், சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல். இது தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.
Leave a Reply