Category Archives: திருநெல்வேலி

கைலாசநாதர் திருக்கோயில், தென்திருப்பேரை

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தென்திருப்பேரை, திருநெல்வேலி மாவட்டம்

+91- 93658 89291

காலை 7 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
அம்மன் அழகிய பொன்னம்மை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் தாமிரபரணி
ஆகமம் காமீகம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் தென்திருப்பேரை
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

அகத்தியரின் சீடர் உரோமசர் சிவதரிசனம் பெற விரும்பினார். அகத்தியரின் ஆலோசனைப்படி தாமிரபரணி தீர்த்தத்தில் ஒன்பது மலர்களை மிதக்க விட்டார். அதில், ஏழாவது மலர் கரையொதுங்கிய தலம் இது. இங்கு கைலாசநாதர் இலிங்க வடிவில் காட்சி தருகிறார். சிவலிங்கத்தின் பீடம் தாமரை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. புதன் கிரகத்தின் அனுக்கிரகம் பெற விரும்புபவர்கள், சுவாமிக்கு பச்சை நிற ஆடை சாத்தி, பாசிப்பயிறு மற்றும் சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள். கைலாசநாதருக்கு வலப்புறத்தில் அம்பிகை அழகியபொன்னம்மை சன்னதியில் கிழக்கு நோக்கியிருக்கிறாள்.

கைலாசநாதர் கோயில், ஸ்ரீவைகுண்டம்

அருள்மிகு கைலாசநாதர் கோயில், ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி மாவட்டம் .

+91- 4630 – 256 492.

காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
அம்மன் சிவகாமி
தீர்த்தம் தாமிரபரணி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ஸ்ரீவைகுண்டம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

உரோமசர் தாமிரபரணியில் மிதக்க விட்ட மலர்களில் ஆறாவது மலர் கரை ஒதுங்கிய தலம் இது. இங்கு ஒரு இலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இவர் கைலாசநாதர் எனப்பட்டார். சனிபகவானின் அம்சத்துடன் காட்சி தரும் இவர், சிவகாமி அம்பாளுடன் உள்ளார். சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தியை சுற்றிலும் 108 விளக்குகள் உள்ளது. இந்த விளக்குகளை ஏற்றி சுவாமியை வழிபட்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த இக்கோயிலில், நவ கைலாய தலங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்த உரோமச முனிவர், மற்றும் நடராஜர், அக்னிபத்திரர், வீரபத்திரர் ஆகியோரின் சிற்பங்கள் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோரும் காட்சி தருகின்றனர். இங்குள்ள கொடிமரம் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். இத்தலத்திலுள்ள நடராஜரை சந்தன சபாபதி என அழைக்கின்றனர்.