Category Archives: திண்டுக்கல்

அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், அகரம்

அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், அகரம் (தாடிக்கொம்பு)- 624 709. திண்டுக்கல் மாவட்டம்.

+91 98657 72875 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – முத்தாலம்மன்

உற்சவர்: – கிளி ஏந்திய முத்தாலம்மன்

தல விருட்சம்: – அரசு

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – அகரம்

மாவட்டம்: – திண்டுக்கல்

மாநிலம்: – தமிழ்நாடு

விசயநகரப் பேரரசு காலத்தில் வடநாட்டில் வசித்த சக்கராயர் அய்யர் என்ற பக்தர் தென்திசை வந்தார்.

வருமுன், அவர் தினமும் வணங்கும் அம்பாளை நோக்கி,”அம்மா. நான் தென் திசை செல்லுகின்றேன். அங்கு எந்தக் கோயிலில் உன்னை வணங்குவேன்?” என்று கேட்டார். அதற்கு அம்பாளும், “இங்கிருந்து கொஞ்சம் மண் எடுத்துக்கொண்டு செல். எங்கே இருந்து என்னை வணங்க நினைக்கிறாயோ அந்த இடத்தில் இந்த மண்ணை வைத்துவிட்டு என்னை அழை. நான் வருவேன்என்றாள். அதன்படி வரும்போது, அவர் வணங்கி வந்த அம்பாள் கோயிலில் இருந்து சிறிது மண் எடுத்துக் கொண்டு வந்தார். அம்பிகை உத்தரவுப்படி அம்மண்ணை இவ்விடத்தில். அங்கு ஒரு கல்லை மட்டும் வைத்து அம்பிகையை வணங்கி வந்தார். பிற்காலத்தில் இங்கு வசித்த பக்தர் ஒருவர் மூன்று அம்பிகையர் சிலை வடித்து பிரதிட்டை செய்து கோயில் எழுப்பினார். அம்பிகைக்கு முத்தாலம்மன் என்ற பெயர் ஏற்பட்டது. முத்தாலம்மனுக்காக தோன்றிய முதல் தலமாக கருதப்படுவதால், தமிழ் எழுத்துக்களில் அகரமே முதன்மை என்பதன் அடிப்படையில் ஊருக்கு அகரம்என்ற பெயர் ஏற்பட்டது.

அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில், ஒட்டன்சத்திரம்

அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில், ஒட்டன்சத்திரம் – 624 619, திண்டுக்கல் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – அன்னகாமு

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – ஒட்டன்சத்திரம்

மாவட்டம்: – திண்டுக்கல்

மாநிலம்: – தமிழ்நாடு

பழங்காலத்தில் மூங்கில் மரத்தடியில் அரளிச் செடிகளுக்கு நடுவில் சிறிய அளவில் காமாட்சியம்மன் அருள் பாலித்துள்ளார். அதனால் மூங்கிலடி அன்னகாமுஎன்று அழைக்கப்பட்டாள். இதற்கான ஆதாரம் கோயில் கல்வெட்டுக்களில் இன்றும் உள்ளது.

1942-ம் ஆண்டு தும்மிச்சம்பட்டியை சேர்ந்த பெரியாக்கவுண்டர் என்பவரின் சொந்த பராமரிப்பில் இக்கோயில் இருந்துள்ளது. அவர் காமாட்சியம்மனுக்கு காவல் தெய்வமான கருப்பணசாமி சிலையை உருவாக்கி நிறுவியுள்ளார்.