Category Archives: திண்டுக்கல்

அருள்மிகு இடும்பன் திருக்கோயில், பழநி

அருள்மிகு இடும்பன் திருக்கோயில், பழநி, திண்டுக்கல் மாவட்டம்.

+91- 4545-242 236 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் இடும்பன்
அம்மன் இடும்பி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் பழநி
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

முருகனால் அழிக்கப்பட்ட சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களுக்கு வில்லாசிரியனாகத் திகழ்ந்தவன் இடும்பாசுரன். முருகனால் இவர்கள் அழிக்கப்பட்ட பிறகு, இடும்பன் சிவபூஜை செய்ய ஆரம்பித்தான். சிறந்த சிவபக்தனாக விளங்கிய இடும்பனுக்கு அவனது மனைவி இடும்பி உற்றதுணையாக விளங்கினாள். இவர்கள் தங்கியிருந்த இடம் இடும்ப வனம்எனப்பட்டது. (தற்போது இந்தஇடம் திருத்துறைப் பூண்டியில் இருந்து 16 கி.மீ., தூரத்தில் உள்ளது) இந்நிலையில், அகத்தியர் தனது பூஜைக்காக சிவதி சொரூபங்களாக விளங்கும் சிவமலை மற்றும் சக்திதிமலை ஆகியவற்றை முருகப் பெருமானிடம் கேட்டார். முருகப்பெருமானும் அவற்றைத் தந்தருளினார். அவற்றை, கேதாரத்தில் உள்ள பூர்ச்சவனம் என்னுமிடத்தில் வைத்து வணங்கி வந்தார் அகத்தியர். இந்நிலையில் மலைகளை அங்கேயே வைத்து விட்டு பொதிகை செல்லும் நிலை ஏற்பட்டது. இடும்பன் வன சஞ்சாரம் செய்த போது, குற்றால மலையில் தங்கியிருந்த அகத்தியரைக் கண்டான். முருகப்பெருமானின் கருணையைப் பெற விரும்புவதாகக் கூறினான். அசுரகுருவாயினும் அவனது உயர்ந்த எண்ணத்தைப் புரிந்து கொண்ட அகத்தியர், கேதாரத்திலுள்ள சிவமலை, சக்திமலையை சரவணபவஎன்னும் ஆறெழுத்து மந்திரத்தையும், பாவம் போக்கும் அரோகராஎன்றும் முழங்கியபடியே பொதிகைக்கு கொண்டு வந்தால் முருகனின் தரிசனம் கிடைக்குமென்றார். இடும்பனும் இடும்பியும் அங்கு சென்று அம்மலையைத் தூக்க சிவனை வேண்டித் தவமிருந்தனர். அப்போது பிரமதண்டம் (கம்பு) ஒன்று தோன்றியது. அஷ்டதிக்கு நாகங்களும் அங்கே வந்தன. அவற்றை பிரமதண்டத்தில் உறிபோல் கட்டி, மலைகளை அதில் வைத்து காவடியாகச் சுமந்தபடி பொதிகை வரும் வழியில், திருவாவினன்குடி என்ற இடத்தில் பாரம் அதிகமாகவே அங்கே இறக்கி வைத்தான். இளைப்பாறிய பிறகு மீண்டும் தூக்கவே அவனால் முடியவில்லை. சிவமலையின் மீது ஒரு சிறுவன் ஏறி நின்று விளையாடிக் கொண்டிருந்தான். அவனது அழகைப் பார்த்ததுமே இடும்பன் அவனை ஒரு தெய்வப்பிறவி என்று நினைத்தான். மலையில் இருந்து இறங்கிவிடும்படி அவனைச் சொன்னான். அவன் மறுத்ததுடன், “இது நான் தங்கப்போகும் மலைஎன்று வாதிட்டான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அருள்மிகு வேலாயுத சுவாமி கோவில், திருவாவினன்குடி

அருள்மிகு வேலாயுத சுவாமி கோவில், திருவாவினன்குடி, திண்டுக்கல் மாவட்டம்.

காலை 6 மணியில் இருந்து, இரவு 9 மணி வரையில் தொடர்ந்து திறந்திருக்கும்.

நாரதர் கொடுத்த கனியை, தனக்கு தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி இத்தலம் வந்தார். சமாதானம் செய்ய, அம்பிகை பின்தொடர்ந்து வந்தாள். சிவனும் அவளைப் பின்தொடர்ந்தார். முருகன் இத்தலத்தில் நின்றார். அம்பிகை, இங்கு மகனை சமாதானம் செய்தாள். ஆனாலும் முருகன் விடாப்பிடியாக இங்கேயே இருக்க விரும்புவதாகச் சொல்லி தங்கிவிட்டார். பிற்காலத்தில் இவ்விடத்தில் முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி குழந்தை வடிவமாக நின்றதால், “குழந்தை வேலாயுதர்என்று பெயர் பெற்றார்.


திருவாவினன்குடி ஆலயம் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் இருக்கிறது. இவ்வாலயத்தின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை காணப்படுகிறது. முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இப்பொய்கையில் நீராடிச் செல்வர். இப்பொய்கையின் அருகிலிருந்துதான் காவடி எடுக்கப்போகும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளைக் கொண்டு செல்வர். திருவாவினன்குடி கோயிலில் முருகப்பெருமான் மயில் மீதமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாகக் காட்சி தந்தருள்கின்றார்.

இந்த திருத்தலத்தை திருஎன்ற இலக்குமி தேவியும், என்ற காமதேனுவும், இனன்என்ற சூரியனும் குடியிருந்து முருகப்பெருமானை வழிபட்டமையால் திரு ஆ இனன் குடிஎன்று பெயர் பெற்றது.

திரு லட்சுமி
காமதேனு
இனன் சூரியன்
கு பூமாதேவி
டி அக்கினிதேவன்