அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில், ஒட்டன்சத்திரம்

அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில், ஒட்டன்சத்திரம் – 624 619, திண்டுக்கல் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – அன்னகாமு

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – ஒட்டன்சத்திரம்

மாவட்டம்: – திண்டுக்கல்

மாநிலம்: – தமிழ்நாடு

பழங்காலத்தில் மூங்கில் மரத்தடியில் அரளிச் செடிகளுக்கு நடுவில் சிறிய அளவில் காமாட்சியம்மன் அருள் பாலித்துள்ளார். அதனால் மூங்கிலடி அன்னகாமுஎன்று அழைக்கப்பட்டாள். இதற்கான ஆதாரம் கோயில் கல்வெட்டுக்களில் இன்றும் உள்ளது.

1942-ம் ஆண்டு தும்மிச்சம்பட்டியை சேர்ந்த பெரியாக்கவுண்டர் என்பவரின் சொந்த பராமரிப்பில் இக்கோயில் இருந்துள்ளது. அவர் காமாட்சியம்மனுக்கு காவல் தெய்வமான கருப்பணசாமி சிலையை உருவாக்கி நிறுவியுள்ளார்.

அக்காலத்தில் இக்கோயிலில் சிவராத்திரி விழா மட்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

தனியாரின் பராமரிப்பில் மரத்தடியில் சிறியதாக இருந்த கோயிலை கோபுரத்துடன் உருவாக்க திருப்பணிக்குழு உறுப்பினர்கள் நிதி வசூல் செய்து கோபுரம் எழுப்பியுள்ளனர்.

தனலட்சுமி என்பவர் காமாட்சியம்மன் சிலையை கோயிலுக்கு வழங்கி உள்ளார். அம்மனின் தலையில் அலங்கரிக்கும் வெள்ளி கிரீடம் மிகவும் அழகாக இருக்கும்,

இத்தலத்திற்கு அருகில் அமைந்துள்ள திருத்தலங்கள் :

அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில், அருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயில், அருள்மிகு இடும்பன் திருக்கோயில், அருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்

அன்னகாமு திருக்கோயிலில் அஷ்டலட்சுமியும், சக்திவிநாயகரும் அமர்ந்துள்ளனர்.

63 நாயன்மார்களை நினைவு படுத்தும் விதமாக 63 தீபங்கள் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.

திருவிழா: நவராத்திரி

காமாட்சியம்மன் தன்னை நாடிவரும் பெண்களுக்கு குழந்தைபாக்கியம் கொடுக்கும் சக்தி உள்ள தெய்வமாகும்.

திருமணம் ஆகாதவர்களுக்கும் விரைவில் திருமணம் கூடும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் நிலவி வருகிறது.

வேண்டுகோள் நிறைவேறியதும் அம்மனுக்கு புடவை சாத்தியும், அபிசேகம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *