Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு நவநீத கிருஷ்ணர் திருக்கோயில், மதுரை

அருள்மிகு நவநீத கிருஷ்ணர் திருக்கோயில், பந்தடி 5வது தெரு, விளக்குத்தூண், மதுரை-625 001. மதுரை மாவட்டம்.

+91- 92451 45226 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நவநீத கிருஷ்ணர்
தாயார் மகாலட்சுமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்
ஊர் மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

நவநீதம்என்றால் வெண்ணெய்எனப்பொருள். தண்ணீரில் பால் கலந்தால் அதோடு ஐக்கியமாகி விடும். உயிர்களான நாமும், கடவுளால் அருளப்பட்ட இந்த பூமியை நமக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

ஏ மனிதனே! நீ தண்ணீரில் கலக்கும் பால் போல் அல்லாமல், அந்த பாலில் இருந்து பிறந்து அந்த பாலிலேயே கலக்க மறுக்கும் வெண்ணெயைப் போல், ஒட்டுமில்லாமல் உறவுமில்லாமல் இந்த பூமியில் வாழ். பிருந்தாவனத்து கோபியர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து, எப்படி என்னை வந்தடைந்தார்களோ, அப்படியே வந்துசேர்என்று உணர்த்தவே, அவன் பூமியில் அவதரித்தான். வெண்ணெய் திருடினான். ஆம். உலகப்பற்று இல்லாமல், அவனையே எண்ணிக்கொண்டிருந்த மனிதர்களுக்கு அவன் மோட்சம் தந்தான். அவனை அடைய மறுத்து வெறுத்த கம்சன், சிசுபாலன், துரியோதனன், போன்றவர்களைக் கட்டாயப்படுத்தி மோட்சத்திற்கு அனுப்பி கருணாமூர்த்திஎன பெயர் பெற்றான்.

முன்மண்டபத்தில் இராமர், சீதை, இலட்சுமணர் சன்னதி உள்ளது. இச்சன்னதி எதிரே ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். மூலஸ்தானத்தில் நவநீதகிருஷ்ணன் இரண்டு கைகளிலும் வெண்ணெயுடன், சிரித்த முகத்துடன், பாலகனாக நின்ற கோலத்தில் அருளுகிறார். இவரது வலது மார்பில் மகாலட்சுமியும், அருகிலேயே உற்சவரும் இருக்கின்றனர். இவர் வீதியுலா செல்வது கிடையாது. ஒவ்வொரு ரோகிணி நட்சத்திரத்திலும் சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது. கிருஷ்ணர் பிறந்த தினமான கோகுலாஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமிக்கு மறுநாள் மாலையில் பகவத்கீதை பாராயணம் நடக்கிறது.

அருள்மிகு நவநீதகிருஷ்ணன் கோயில் , மளூர்

அருள்மிகு நவநீதகிருஷ்ணன் கோயில் , மளூர், கர்நாடகா

கர்நாடகாவில் உள்ள மளூர் நவநீதகிருஷ்ணன் கோயிலில் குழந்தைக்கண்ணன் தவழும் நிலையில் விக்ரகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கையில் வெண்ணையை உருண்டையாக பிடித்து கண்ணன் வைத்துள்ளார். இந்தக்கண்ணனின் பாதங்களில் சங்கு சக்கர ரேகைகள் உள்ளன. கழுத்தில் முத்து மாலையும் புலி நக மாலையும் அசைந்தாடும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இடுப்பில் சலங்கை பட்டை ஒலி கேட்கும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும் கருநிற கல்லால் ஆன நகைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற குழந்தைக்கண்ணன் சிற்பத்தை இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது.