Category Archives: முருகன் ஆலயங்கள்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோவில், திருப்பரங்குன்றம்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோவில், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்.            

+91- 452- 248 2248, 248 2648, 98653- 70393, +91-98421- 93244, +91-94433 – 82946 (மாற்றங்களுக்குட்பட்டவை)                         

காலை 5.30 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்

சண்முகர்

அம்மன்

தெய்வானை

தல விருட்சம்

கல்லத்தி

தீர்த்தம்

லட்சுமி தீர்த்தம், சரவணப் பொய்கை உட்பட 11 தீர்த்தங்கள்

பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

தென்பரங்குன்றம்

ஊர்

திருப்பரங்குன்றம்

மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

தேவர்கள் தங்களை துன்புறுத்திய சூரபத்மனிடமிருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அவர் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து ஆறு முகங்களுடன் முருகப்பெருமான் தோன்றினார். சூரனுடன் போரிட்டு அவனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். இந்த நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நிகழ்ந்தது. சூரனை வெற்றி கொண்ட முருகனுக்கு, இந்திரன் தனது மகளான தெய்வானையைத் திருமணம் செய்து தர சம்மதித்தார். அவர்களது திருமணம் திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்தது. திருமணத்திற்கு அனைத்து தெய்வங்கள், தேவர்கள், மகரிஷிகள் என அனைவரும் வந்தனர். நாரதர் முன்னிலையில் முருகன், தெய்வானை திருமணம் நடந்தது. இதேகோலத்தில் சுவாமி இங்கு எழுந்தருளினார். சுவாமிக்கு சுப்பிரமணியசுவாமிஎன்ற பெயர் சூட்டப்பட்டது.

இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலைஎன பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. “திரு + பரம் + குன்றம்.” பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான். குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகத் திருப்பரங்குன்றம்என ஆயிற்று.

அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், புதுவண்டிப்பாளையம்

அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், புதுவண்டிப்பாளையம், கடலூர் மாவட்டம்.

முருகன் தலங்களிலேயே திருச்செந்தூரைப் போலவே மிகவும் சிறப்பாக சூரசம்காரம் கொண்டாடப் படும் தலம் கடலூர் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்.

சமயக்குரவர் நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசர் சமணர்களின் கொடுமைக்கு ஆளானார். சமணர்களின் தலைவனும், அரசனுமான மகேந்திரவர்மன் அவரை கல்லோடு சேர்த்துக் கட்டி வங்கக் கடலில் வீசி எறிந்தான். இருந்தும் அந்த கல்லையே தெப்பமாக்கி நமசிவாயஎன்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்து திருப்பாதிரிப்புலியூருக்கு தென் திசை நோக்கி மிதந்து வந்து, கெடில நதி வாயிலாக கரையேறினார் நாவுக்கரசர்.

அப்பர் பெருமான் கரையேறிய அருங்காட்சியினை ஆண்டு தோறும் சித்திரை அனுஷத்தில் கொண்டாடுவார்கள். அப்படி கொண்டாடும் போது திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி உடனாய பாடலீஸ்வரரும், புதுவண்டிப்பாளையம் முருகப்பெருமானும் அந்த தலத்துக்கு எழுந்தருளி அப்பருக்கும், பக்தர்களுக்கும் காட்சி கொடுக்கின்றனர்.

இத்தலம் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தலம். இங்கு வேல் கோட்டம்தனியே அமைந்துள்ளது. இதற்கு ஞாயிறு, கிருத்திகை, பூச நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த வேலை தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு எல்லாவித பலன்களும், தீராத கொடிய நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.