Category Archives: முருகன் ஆலயங்கள்

அருள்மிகு திருமுருக நாதசுவாமி திருக்கோயில், திருமுருகன்பூண்டி

அருள்மிகு திருமுருக நாதசுவாமி திருக்கோயில், திருமுருகன்பூண்டி, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4296- 273 507 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை5.30 மணி முதல் 12.45 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

திருமுருகநாதசுவாமி

அம்மன்

முயங்குபோன் முலைவள்ளி

தல விருட்சம்

குருக்கத்தி

தீர்த்தம்

பிரம்ம, ஞான,சண்முக தீர்த்தம்

பழமை

2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

மாதவிவனம், ஸ்கந்தமாபுரி

ஊர்

திருமுருகன்பூண்டி

மாவட்டம்

கோயம்புத்தூர்

மாநிலம்

தமிழ்நாடு

ஆயிரத்தெட்டு அண்டங்களையும் அளவிலாத காலம் வரையில் அடக்கி ஆளும் வரம் பெற்ற சூரபத்மன், ஆணவம் கொண்டு தேவர்களை சிறைப்படுத்தி, துன்புறுத்தி வந்தான். அவனது அட்டூழியம் நாளுக்கு நாள் பெருகவே அவனை அழித்து தேவகுலத்தை காத்திட, முருகன் சம்காரத்திற்கு தயாரானார். ஆறுமுகங்கள் கொண்டு அல்லல் தந்த சூரனுடன் போர் கொண்டு அவனை தனது வேற்படையால் இரண்டாக வெட்டி, பின்னர் மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். எப்படியிருப்பினும், சூரனைத் துன்புறுத்தியதன் விளைவாக ஆறுமுகனை வீரஹத்திதோஷம் பீடித்தது. தோஷம் நீங்க, கயிலை மலையில் இறைவன் சிவபெருமான் கூறியபடி, மாதவி நாதரை வணங்க வந்தார். அப்போது பூஜைக்கு தீர்த்தம் தேவைப்பட, அவர் தனது வேலினால் அவ்விடத்தில் ஊன்ற தீர்த்தம் தோன்றியது. அந்நீரை எடுத்து, சிவனை மேற்கு நோக்கியபடி அமைத்து வணங்கினார். ‘வீரஹத்திதோஷம் நீங்கப்பெற்றார். அவ்வாறு நீங்கிய வீரஹத்தி, தற்போது கோயிலின் வெளியே உள்ள வேம்படி முருகன் சன்னதியின் அருகில் உள்ள சதுரக்கல்லாக இருப்பதாகப் புராண வரலாறு கூறுகிறது.

அத்துடன் தான் பிடித்து வழிபட்ட லிங்கத்திற்கு திருமுருகநாதசுவாமிஎன பெயரிட்டார். முருகன் வந்து வழிபட்டு சிறப்பு பெற்றதால் மாதவிவனம் திருமுருகன் பூண்டியாகமாறியது.

அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி, செங்கோட்டை

அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி, செங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்.

+91-4633- 237 131, 237 343 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6-பகல் 1 மணி, மாலை 5- இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

முத்துக்குமாரசுவாமி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

பண்பொழி

மாவட்டம்

திருநெல்வேலி

மாநிலம்

தமிழ்நாடு

ஒரு காலத்தில் திருமலைக்கோயிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. இங்கு பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளைச் செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளியமரத்தடியில் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் கனவில் எழுந்தருளி, “பட்டரே. இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீர் அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப் பாரும். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும்என்றார். அதன்படியே அரசருக்கு தகவல் தெரிவித்த பூவன்பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தார். பகல்கனவு பலிக்காது. முருகனை நம்புவோருக்கு எந்நேரம் நற்கனவு கண்டாலும் அது பலித்து விடும். இக்கோயில் திருப்பணிக்காலத்தில் கல்தூண்களையும், உத்தரங்களையும் மலையின் மீது இழுத்து செல்ல யானைகள் பயன்படுத்தப்பட்டன. கனத்த பெரிய கயிறுகள் கிடைக்காத அக்காலத்தில், பனைநார் கயிறு மூலம் உத்தரங்கள் மேலே இழுக்கப்பட்டன.

சில நேரங்களில் கட்டு அவிழ்ந்து தூண்கள் கீழே விழுவதுண்டு. தூண்கள் பயங்கர வேகத்துடன் கீழ்நோக்கி உருண்டு வரும். அப்போது, இப்பகுதியில் வசித்த துறவியான சிவகாமி அம்மையார் என்பவர் தன் உயிரையும் பொருட்படுத்தாது முருகாஎனக்கூறிக்கொண்டு தன் தலையை கொடுத்து தடுத்து நிறுத்துவாராம். மறுபடியும் அந்த தூண்கள் மேலே இழுக்கப்படும்வரை தன் தலையால் தாங்கியபடி இருப்பாராம். இப்படி அற்புத சாதனையை நிகழ்த்தும் சக்தியை முருகப்பெருமான் அவருக்கு அருளியிருந்தார். மேலும், வாழைமட்டைகளில் செங்கல் ஏற்றிக்கொண்டு, மலை உச்சிக்கு இழுத்தும் சென்று திருப்பணிக்கு உதவியுள்ளார். இவருக்கு இக்கோயிலில் சிலை இருக்கிறது.