Category Archives: திருமால் ஆலயங்கள்

அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திம்மராஜபுரம்

அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திம்மராஜபுரம், திருநெல்வேலி மாவட்டம்.

காலை 7 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வெங்கடாசலபதி

உற்சவர்

வெங்கடாசலபதி

தல விருட்சம்

பனை மரம்

தீர்த்தம்

ஜடாயு தீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

திம்மராஜபுரம்

மாவட்டம்

திருநெல்வேலி

மாநிலம்

தமிழ்நாடு

தெலுங்கு மொழி பேசும் திம்மராஜா என்ற குறுநில மன்னர் திருநெல்வேலியின் ஒரு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தார். இவர் திருப்பதி வெங்கடாசலபதியின் பக்தர். ஏழுமலையானை அடிக்கடி தரிசிப்பதற்காக தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் ஒரு சிறிய கோயிலைக் கட்டி, ஏராளமான நிலங்களையும் வருமானத்துக்காக எழுதி வைத்தார். கோயிலில் வெங்கடாசலபதி பிரதிஷ்டை செய்யப்பட்டார். தன் பெயரால் கோயில் இருந்த பகுதிக்கு திம்மராஜபுரம்என்று பெயரிட்டார். தாமிரபரணி நதியை ஒட்டி கோயில் அமைந்தது. கோயில் அமைந்துள்ள பகுதியில் ஓடும் இந்நதி ஜடாயு தீர்த்தம்என பெயர் பெற்றது. அதுவே இக்கோயிலின் தீர்த்தமும் ஆகும். பிற்காலத்தில் உற்சவர் வெங்கடாசலபதி சிலை அமைக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அவர் அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலை தெலுங்கு மன்னர் கட்டியதால், வாசலில் கொடிக்கம்பத்திற்கு பதிலாக ஆந்திர மாடலில் தீப ஸ்தம்பம் உள்ளது.

அருள்மிகு சங்காணி வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சங்காணி

அருள்மிகு சங்காணி வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சங்காணி, திருநெல்வேலி மாவட்டம்.

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வரதராஜப்பெருமாள்

தாயார்

ஸ்ரீதேவி பூதேவி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

சங்காணி

மாவட்டம்

திருநெல்வேலி

மாநிலம்

தமிழ்நாடு

நாயக்கர் மன்னர் ஒருவர் இக்கோயிலின் பெருமையை அறிந்து தரிசனம் செய்ய விரும்பினார். அவரது அமைச்சர் அதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்தார். சங்காணி திருவிழாக்கோலம் பூண்டது. மன்னர் பெருமாளை தரிசிக்கும் நாள் நெருங்கி விட்டது. அர்ச்சகர் பரபரப்பாக பணிகளைக் கவனித்து வந்தார். மன்னர் வருவதற்கு முதல்நாள் நடை சாத்தி விட்டு, வீடு சென்றார். அதிகாலையில் எழ முயன்றார். முடியவில்லை. அர்ச்சகருக்கு கடுமையான காய்ச்சல். அவர் பெருமாளை நினைத்து,”பெருமாளே. இது என்ன சோதனை. நீதான் என்னை காப்பாற்ற வேண்டும்என வேண்டினார். காய்ச்சலின் வேகத்தில் மயங்கி விட்டார். மன்னர் கோயிலுக்கு வந்து விட்டார். அங்கே பெருமாளே அர்ச்சகராய் மாறி நின்றார். வரதராஜப்பெருமாளின் பெருமைகளை மன்னருக்கு எடுத்துரைத்ததோடு, மன்னரே வியக்கும் அளவுக்கு பாசுரங்களையும் பாடினார். பெருமாளின் அழகில் மயங்கியதோடு, பெருமாளின் பெருமையை சிறப்பாக எடுத்துக்கூறியதற்காக பொன்னையும், பொருளையும் அர்ச்சகருக்கு அள்ளி அள்ளி கொடுத்து சென்றார் மன்னர். இரண்டு நாள் கழித்து, உடல் குணமடைந்தவுடன் பணிக்கு பயந்து வந்த அர்ச்சகரை அங்கிருந்தவர்கள், பெருமையாக பேசினர். “மன்னரை அசத்தி விட்டீரேஎன்றனர். இறைவனே தனக்காக அர்ச்சகர் வேலை செய்துள்ளார் என மகிழ்ந்து, புகழ்ந்தார்.