Category Archives: திருமால் ஆலயங்கள்

அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர்

அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர்– 631102, வேலூர் மாவட்டம்.

+91- 44-2232 1221, +91-4172-260 255 (மாற்றங்களுக்குட்பட்டவை)

மலைக்கோயில்களில் காலை 8 முதல் மாலை 5.30 மணிவரை தரிசனம் செய்யலாம்.

மூலவர் யோக நரசிம்மர் (அக்காரக்கனி )
உற்சவர் பக்தவத்சலம், சுதாவல்லி
தாயார் அமிர்தவள்ளி
தீர்த்தம் அமிர்த தீர்த்தம், தக்கான்குளம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கடிகை
ஊர் சோளிங்கர்
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு

பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். இவர்கள் இங்கு வந்து தவம் இருந்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. ஒரு காலத்தில் விசுவாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிபட்டு பிரம்மரிஷிபட்டம் பெற்றாராம். அதே போல் தங்களுக்கும் பெருமாளின் தரிசனம் உடனடியாக வேண்டும் என்ற காரணத்தினால்தான் அவர்கள் இங்கு தவமிருந்தனர். இராமாவதாரம் முடிந்ததும் இராமன் ஆஞ்சநேயரிடம், “இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதை போக்கி வைஎன்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்ய, அது முடியாமல் போனதால் இராமனை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து, ரிஷிகளைக் காப்பாற்றினார்.

அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில், நத்தம் (வரகுணமங்கை)

அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில், நத்தம் (வரகுணமங்கை) – 628 601, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விஜயாஸனர்(பரமபத நாதன்)
உற்சவர் எம்மடர் கடிவான்
தாயார் வரகுண வல்லி, வரகுணமங்க‌ை
தீர்த்தம் அக்னி தீர்த்தம், ‌தேவபுஷ்கரணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் நத்தம்(வரகுணமங்கை)
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

நத்தம் என்று ‌சொன்னால்தான் பலருக்கு புரியும். அருகில் வீடுகள் அதிகம் கிடையாது. திருவரகுணமங்கை வேதவித்து என்னும் பிராமணருக்கு பகவான் காட்சி தந்த தலம். பிராமணரின் பிரார்‌த்தனைப்படி விஜயாசனர் என்ற திருநாமத்தோடு பகவான் காட்சி ‌‌கொடுத்த தலம். அக்னி ரோமச முனிவர், சத்தியவான் ஆகியோர்க்கு காட்சிதந்த தலம்.