Category Archives: திருமால் ஆலயங்கள்

திருக்காலடியப்பன் திருக்கோயில், காலடி

அருள்மிகு திருக்காலடியப்பன் திருக்கோயில், காலடி தேவஸ்தானம், ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், காலடி, எர்ணாகுளம் மாவட்டம். கேரளா மாநிலம்.

+91- 93888 62321

காலை 5 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காலடியப்பன் (ஸ்ரீகண்ணன்)
தல விருட்சம் பவளமல்லி
தீர்த்தம் பூர்ணாநதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சசலம்
ஊர் காலடி
மாவட்டம் எர்ணாகுளம்
மாநிலம் கேரளா

கேரள மாநிலம் காலடியில் வசித்து வந்த சிவகுரு ஆர்யாம்பாள் தம்பதியினருக்கு வெகு நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இவர்கள் திருச்சூர் வடக்குநாதரிடம் குழந்தை வேண்டி வழிபட்டனர். சிவனின் கருணையால் கி.பி. 788ல் இந்த தம்பதியினருக்கு ஆதிசங்கரர் சிவனின் அம்சமாக அவதரித்தார். சங்கரரின் 3வது வயதில் அவரது தந்தை காலமானார். உறவினர்கள் உதவியுடன் சங்கரர் 5 வயதிற்குள் சாஸ்திரங்களை பயின்றார். 7 வயதிற்குள் வேதங்களை பயின்ற சங்கரர், திருமணம் செய்யாமல், தன் தாய்க்குப் பணிவிடை செய்து வந்தார். பின்னர் தாயின் அனுமதியை சமயோசிதமாகப் பெற்று, துறவு மேற்கொண்டார்.

சங்கரர் தனது குருகுல வாசத்தின் போது தினமும் பிட்சை எடுத்து குருவிற்கு அர்ப்பணித்த பிறகு, தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த சங்கரர், மறுநாள் அயாசகன் என்ற ஏழை வீட்டு வாசலில் நின்று பிட்சை கேட்டார். வெளியே வந்த பெண்மணியிடம் உணவேதும் இல்லை. ஆயினும், தன்னிடம் உணவு கேட்டு வந்த பாலகனை வெறும் கையுடன் அனுப்ப மனமில்லாமல், காய்ந்து போன நெல்லிக்கனியைத் தானமாக வழங்கினாள். சங்கரரின் கண்கள் குளமாகின. பிஞ்சு பாலகனின் நெஞ்சை உலுக்கிய இந்த செயல் உணர்ச்சிப் பிழம்பாக உருவெடுத்தது.

அருள்மிகு வடபத்ர சாயி(ஆண்டாள்) திருக்கோயில், ஸ்ரீ வில்லிபுத்தூர்

அருள்மிகு வடபத்ர சாயி(ஆண்டாள்) திருக்கோயில், ஸ்ரீ வில்லிபுத்தூர் – 626 125, விருதுநகர் மாவட்டம்.+91-4563 – 260 254 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வடபத்ரசாயி ஸ்ரீவில்லிபுத்தூர்
தாயார் ஆண்டாள்(கோதைநாச்சி)
தீர்த்தம் திருமுக்குளம், கண்ணாடித்தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வில்லிபுத்தூர்
ஊர் ஸ்ரீ வில்லிபுத்தூர்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

நந்தவனத்தில் தாம் பறிக்கும் பூக்களை இறைவனுக்கு மாலையாகக் கட்டி முதலில் அதை தன் கூந்தலில் சூடி, இறைவனுக்கு தாம் ஏற்ற பொருத்தம் உடையவளா என்பதைக் கண்ணாடியிலே கண்டு களிப்பாள். பின்னர் மாலையைக் கழட்டி பூஜைக்கு கொடுத்து விடுவாள். பெரியாழ்வாரும் தினமும் இதையே இறைவனுக்கு சாத்துவார். ஒரு நாள் மாலையில் தலைமுடி இருப்பது கண்டு அஞ்சி அதைத் தவிர்த்து விட்டு வேறு மலர்களை சூட்டினார். உடனே இறைவன், “ஆழ்வார். கோதையின் கூந்தலில் சூட்டிய மாலையையே நான் விரும்புகிறேன். அதையே எனக்கு சூட்டுஎன்றார். ஆழ்வாரும் கோதையை மானுடர் யாருக்கும் மணமுடிக்க சம்மதிக்காமல் இறைவனுக்காக காத்திருந்தார். கோதையும் இறைவனையே நினைத்து ஏங்கித் தொழுதபடியே இருந்தாள். இறைவனும் தாம் கோதையை நேசிப்பதாகவும் தன்னை திருவரங்கரத்திற்கு வந்து சந்திக்க சொல்ல, கோதையும் பூப்பல்லக்கில் அங்கு சென்று இறைவனோடு ஐக்கியமானாள் . ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கோதையோடு சேர்ந்து எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்க இறைவனும் அதை ஏற்று இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். வைணவர்களின் முக்கிய தலமாக இக்கோயில் போற்றப்படுகிறது.