துன்பங்கள் விலக

துன்பங்கள் விலக

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே! – பெஞ்சமின்.

ஏமாற்றங்கள், சோர்வு, சிக்கல்கள், ஏழ்மை,
இன்னும் எத்தனையோ துன்பங்கள் உள்ளன. பெரும்பான்மையான துன்பங்கள் பிறக்கும் இடம் என்ன என்றால் பிறரை எதிர் பார்த்தல்“, தான் செய்ய வேண்டிய கடமையை உணராது இருத்தல், அல்லது உணர்ந்து செய்யாது இருத்தல், பிறரை எதிர்பார்த்து, இவர் என்னுடைய நன்மைக்காக
இவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று எதிர் பார்ப்பதில்தான்.
ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கு ஏதோ ஒன்று தேவை. ஒரு குடும்பத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். கணவன் நினைப்பார், மனைவி இம்மாதிரிதான் நடந்துக்கொள்ள வேண்டும் என்று. அதேப்போல மனைவியும் தனது கணவன் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று எண்ணுவார். இவ்வாறு எல்லை கட்டிக் கொண்ட பிறகு உண்மையாக அதை விட நல்லதாக இருந்தால் கூட, நாம் எல்லை கட்டிய அளவிட்ட நிலையிலே இருந்து அது மாறி இருக்கும் போது அதை ஏற்றுக் கொள்ளமுடியாத நிலை ஏற்படுகிறது. விளைவு எப்போதுமே பிணக்கு, தவிப்பு, துன்பம், ஏமாற்றம் இவைகள்தான்.
எதிர்பார்த்தலில் பெறவேண்டும் பெறவேண்டும் என்கிற ஆசை அதிகரித்து ஓங்கி நிற்கிறது.

வேதாத்திரி மகரிஷி

துன்பங்கள் 3 வகை:

1. நமது செயலால் நாமே எற்படுத்திக் கொள்ளும் துன்பங்கள். இதன் காரணத்தைக் கண்டுபிடித்து நாமே மாற்றிக் கொள்ளலாம்.
2.
முன்வினையால் எற்படும் துன்பங்கள்.
3.
இயற்கை காரணமாக நம்மையும் மீறி வரும் துன்பங்கள்.

பின்னர் வரும் இருவகையான துன்பங்களைக் களைய நம்மால் இயலாது. ஆகவே இறைவனைச் சரணடையுங்கள். கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று மனமுருக வேண்டுங்கள்.

அங்காளம்மன் முத்தனம் பாளையம் திருப்பூர்
அழகிய சிங்க பெருமாள் திருவேளுக்கை, காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
எறும்பீஸ்வரர் திருவெறும்பூர் திருச்சி
கஜேந்திர வரதன் கபிஸ்தலம் தஞ்சாவூர்
கடம்பவனேஸ்வரர் குளித்தலை கரூர்
கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர் ) கரைவீரம் திருவாரூர்

காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர்

மதுரை

மதுரை

நவநீதேஸ்வரர் சிக்கல் நாகப்பட்டினம்
இலட்சுமி கோபாலர் ஏத்தாப்பூர் சேலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *