அருள்மிகு ஆதிகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம்

அருள்மிகு ஆதிகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம்-631 501.

+91 44 2722 2609

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி 8.30 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – ஆதிகாமாட்சி

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்: – காஞ்சிபுரம்

மாவட்டம்: – காஞ்சிபுரம்

மாநிலம்: – தமிழ்நாடு

அசுரர்கள் சிலர் தேவர்களுக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தனர். தேவர்கள் தங்களைக் காக்கும்படி பூவுலகுக்கு வந்து அம்பிகையை வேண்டித் தவமிருந்தனர். அம்பிகை காளி வடிவம் எடுத்து அசுரர்களை அழித்தாள். பின் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காஞ்சியிலேயே எழுந்தருளினாள். போரிட்ட அம்பிகை உக்கிரமாக இருக்கவே, அவளைச் சாந்தப்படுத்த திருச்(ஸ்ரீ)சக்ரம் நிறுவனம் செய்யப்பட்டது. இவள் ஆதிகாமாட்சிஎன்று பெயர் பெற்றாள். அம்பிகை காளி வடிவம் கொண்ட தலம் என்பதால் காளி கோட்டம்என்றும் பெயருண்டு.

அருள்மிகு ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருக்கோயில், ஆற்றுக்கால்

அருள்மிகு ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருக்கோயில், ஆற்றுக்கால், திருவனந்தபுரம் – 695 009, கேரளா.

+91 471- 245 6456, 246 3130, 2455 600, 2455 700.

காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்:பகவதி அம்மன்

தீர்த்தம்:கிள்ளியாறு

பழமை:1000-2000 வருடங்களுக்கு முன் ஊர்:ஆற்றுக்கால்

மாவட்டம்: திருவனந்தபுரம்

மாநிலம்: கேரளா

மதுரையை எரித்த கற்புக்கரசி கண்ணகியின் அவதாரம்தான் ஆற்றுக்கால் பகவதி எனத் தல புராணம் கூறுகிறது. கண்ணகியின் கணவன் கோவலன் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் ஆணையால் கொல்லப்பட்டான். கண்ணகி நீதிகேட்டு, “தன் கணவன் கள்வன் இல்லைஎன நிரூபித்ததும் மன்னன் தான் செய்த தவறை உணர்ந்து உயிர்விட்டான். இருந்தும், சின மிகுதியால் அவள் மதுரையை எரித்தாள். பின்னர், சேரநாட்டிலுள்ள கொடுங்கலூரில் தங்கினாள். அங்கு சேரமன்னன் கண்ணகிக்கு கோயில் கட்டினான். கொடுங்கலூர் செல்லும் வழியில் ஆற்றுகாலிலுள்ள கிள்ளி ஆற்றின் கரையிலும் தங்கினாள். அங்கும் ஒரு கோயில் எழுப்பப்பட்டது.