அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், அகரம்
அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், அகரம் (தாடிக்கொம்பு)- 624 709. திண்டுக்கல் மாவட்டம்.
+91 98657 72875 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
உற்சவர்: – கிளி ஏந்திய முத்தாலம்மன்
தல விருட்சம்: – அரசு
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர்: – அகரம்
மாநிலம்: – தமிழ்நாடு
விசயநகரப் பேரரசு காலத்தில் வடநாட்டில் வசித்த சக்கராயர் அய்யர் என்ற பக்தர் தென்திசை வந்தார்.
வருமுன், அவர் தினமும் வணங்கும் அம்பாளை நோக்கி,”அம்மா. நான் தென் திசை செல்லுகின்றேன். அங்கு எந்தக் கோயிலில் உன்னை வணங்குவேன்?” என்று கேட்டார். அதற்கு அம்பாளும், “இங்கிருந்து கொஞ்சம் மண் எடுத்துக்கொண்டு செல். எங்கே இருந்து என்னை வணங்க நினைக்கிறாயோ அந்த இடத்தில் இந்த மண்ணை வைத்துவிட்டு என்னை அழை. நான் வருவேன்” என்றாள். அதன்படி வரும்போது, அவர் வணங்கி வந்த அம்பாள் கோயிலில் இருந்து சிறிது மண் எடுத்துக் கொண்டு வந்தார். அம்பிகை உத்தரவுப்படி அம்மண்ணை இவ்விடத்தில். அங்கு ஒரு கல்லை மட்டும் வைத்து அம்பிகையை வணங்கி வந்தார். பிற்காலத்தில் இங்கு வசித்த பக்தர் ஒருவர் மூன்று அம்பிகையர் சிலை வடித்து பிரதிட்டை செய்து கோயில் எழுப்பினார். அம்பிகைக்கு முத்தாலம்மன் என்ற பெயர் ஏற்பட்டது. முத்தாலம்மனுக்காக தோன்றிய முதல் தலமாக கருதப்படுவதால், தமிழ் எழுத்துக்களில் அகரமே முதன்மை என்பதன் அடிப்படையில் ஊருக்கு “அகரம்” என்ற பெயர் ஏற்பட்டது.
அருள்மிகு முப்பந்தல் இசக்கியம்மன், ஆரல்வாய்மொழி
அருள்மிகு முப்பந்தல் இசக்கியம்மன், ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி மாவட்டம்
*********************************************************************************************
கன்னியாகுமரி– நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது ஆரல்வாய்மொழி. இந்த ஊருக்குக் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கிறது முப்பந்தல்.
தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில், அவர்கள் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை, ஒளவைப் பிராட்டியின் தலைமையில் பேசித் தீர்த்த இடம் இது. மூவேந்தர்களும் கூடிக் கலையும் இடம் என்பதால், ‘முப்பந்தல்‘ என்ற பெயர் வந்ததாம்.
“அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர் பூங்கண் இயக்கிக்குப் …..
………(சிலப்பதிகாரம்)
இதன் மூலம் “இயக்கி” என்னும் பெண் தெய்வம் இருந்ததத உணரமுடிகிறது. “இயக்கி“யே “இசக்கி“யாக மருவியதோ?
அகராதி “இசைக்கி” என்ற சொல்லுக்கு “மனதைக் கவர்பவள்” என்ற பொருளைத் தருகிறது. இசக்கி அம்மனை நீலி என்னும் பேய் தெய்வமாக கருதுகின்றமை வில்லுப்பாடல்கள் வழி அறியமுடிகிறது.
முப்பந்தலை அடுத்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் பழவூர். இதன் அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் நாட்டியக்காரி ஒருத்தி வசித் தாள். இவளின் மகள் இசக்கி. இவளை, பழவூரில் வளையல் வியாபாரம் செய்து வந்த செட்டியார் ஒருவரின் மகன் விரும்பினான். இசக்கியை விரும்பினான் என்பதை விட, அவளுக்காக அவளின் தாய் சேர்த்து வைத்திருந்த சொத்துகளை விரும்பினான் என்றே சொல்ல வேண்டும். இதையறியாத இசக்கி, செட்டியாரின் மகனை மனதார நேசித்தாள். இவர்களின் காதலைச் செட்டியார் ஏற்கவில்லை.
எனினும், மகளின் ஆசைக்குக் குறுக்கே நிற்க விரும்பாத இசக்கியின் தாய், பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்து செட்டியாரின் மகனுக்கு அவளைக் கல்யாணம் செய்து வைத்தாள். இசக்கியின் ஊரிலேயே அவர் களது தனிக்குடித்தனம் ஆரம்பித்தது.