Category Archives: ஈரோடு

அருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில், மாரியப்பா நகர், சென்னிமலை

அருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில், மாரியப்பா நகர், சென்னிமலை, ஈரோடு மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆஞ்சநேயர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மாரியப்பா நகர், சென்னிமலை
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

அசோகவனத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாப்பிராட்டியைத் தேடி அனுமன் செல்லும் வழியில், சென்னிமலையில் இறங்கியதாக சொல்லப்படுவதுண்டு. ஆஞ்சநேயர் தங்கிய இடம் பிற்காலத்தில் ஒரு பாறையாக வளர்ந்து உள்ளது. அப்படிப் பாறையாக உள்ள இடத்தில்தான் செல்வ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள மக்கள் ஆஞ்சநேயர் சிலையை குன்றின் மேல் வைத்து வழிபடத் தொடங்கினார்கள். இங்குள்ள ஐம்பொன்னாலான மூலவர் ஆஞ்சநேயர் சிலைக்கு அற்புத சக்தி இருப்பதாக பக்தர்கள் கூறுகிறார்கள். வாயு மகன் ஆஞ்சநேயருக்கு நாடெங்கும் பல கோயில்கள் உள்ளது. அங்கு எல்லாம் ஆஞ்சநேயருக்கு பிரம்மாண்ட அளவில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்படுகிறது. அவைகள் அனைத்தும் கற்சிலைகள்தான். ஆனால் செல்வ ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள சிலை (மூலவர்) ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்தரை அடிஉயரத்தில் 650 கிலோ எடையில் இந்த ஐம்பொன் சிலையை அமைத்துள்ளார்கள்.

அருள்மிகு சீதேவி அம்மன் திருக்கோயில், காஞ்சிக்கோயில்

அருள்மிகு சீதேவி அம்மன் திருக்கோயில், காஞ்சிக்கோயில், ஈரோடு மாவட்டம்.

+91 96550 99100 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சீதேவி அம்மன்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் காஞ்சிக்கோயில்
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

காஞ்சிக்கோயில் சீதேவி அம்மனின் தங்கை பாரியூர் கொண்டத்து காளியம்மன். விவசாயி ஒருவன் கொண்டத்துக் காளியம்மனை தன் மந்திரச் சொல்லால் கட்டி அடிமைப்படுத்தினான். மந்திரத்துக்கு காளி கட்டுப்படும் வழக்கமுடையவள். ஒருமுறை காஞ்சிக்கோயில் திருவிழாவிற்கு சீதேவியம்மன், காளியம்மனை அழைக்கச் சென்றாள். அடிமைப்பட்டிருந்த தங்கையின் நிலை கண்டு கொதித்த அவள், விவசாயியை அழித்தாள். சர்வசக்தியும் வாய்ந்த அவளுக்கு கோயில் கட்டப்பட்டது. விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது.

ஆனி மாதம் தேர்திருவிழா நடக்கிறது. தேர் திருவிழாவின் போது முதல் மூன்று மாதத்திற்கு முன்னால் தேங்காய் தட்டுதல் விழா நடக்கிறது. இதனை தேர் முகூர்த்தம் என்பர். சித்திரை மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து புண்யாசனம் செய்து விழா நடத்துவர்.