Category Archives: முருகன் ஆலயங்கள்

அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், குமரன்குன்றம், குரோம்பேட்டை

அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், குமரன்குன்றம், குரோம்பேட்டை, சென்னை, சென்னை மாவட்டம்.

+91 – 44 – 2223 5319, 93805 10587.

காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுவாமிநாதசுவாமி
உற்சவர் பால சுப்பிரமணியர்
தலவிருட்சம் அரசு
தீர்த்தம் குமார தீர்த்தம்
ஆகமம் காரணாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் குமரன்குன்றம், குரோம்பேட்டை
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு இத்தலத்தில் குன்று மட்டும் இருந்தது. ஒருசமயம் இவ்வூருக்கு வந்த காஞ்சிப்பெரியவர், இம்மலையைப் பார்த்து பிற்காலத்தில் இங்கு முருகன் கோயில் உண்டாகும் எனச் சொல்லிவிட்டுச் சென்று விட்டார். சில காலம் கழித்து பக்தர்கள் சிலர், இம்மலையை சீர்படுத்தினர். அப்போதும் குன்றில் ஒரு வேல் கிடைத்தது. அதை இங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பின்பு முருகனுக்குத் தனிக்கோயில் கட்டப்பட்டது. “சுவாமிநாதன்என்று பெயர் சூட்டப்பட்டது. மலைக்கோயில்களான திருநீர்மலை, திரிசூலம் ஆகிய தலங்களுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் சித்தி விநாயகர், இடும்பன் சன்னதி இருக்கிறது. இங்குள்ள காளி, “ஜெயமங்களதன்மகாளிஎன்றழைக்கப்படுகிறாள். தன்னை வேண்டுபவர்களுக்கு வெற்றியும்(ஜெயம்), மங்களமும் சாந்தமாகத் தருபவள் என்பதால் இவளுக்கு இப்பெயர். பவுர்ணமியில் இவளுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. கந்த சஷ்டியின்போது சூரசம்காரம் முடிந்ததும், முருகன் யானை வாகனத்தில் புறப்பாடாகிறார்.

மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில் சுந்தரேசுவரர் கோயில் இருக்கிறது. இங்கு சிவன், வடக்கு நோக்கிய சன்னதியில், கஜபிருஷ்ட விமானத்தில் கீழ் அருளுகிறார். இலிங்கத்தின் பாணத்தில் சிவனின் முழு உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அம்பாள் மீனாட்சிக்கும் சன்னதி இருக்கிறது. இங்குள்ள நடராஜர், இடது காலை ஊன்றி, வலக்காலை தூக்கி நடனமாடியபடி காட்சி தருகிறார். மதுரையில் அருளும் மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு அமைக்கப்பட்ட சன்னதி என்பதால், இவ்வாறு நடராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். சிவசக்தி அம்சமான சிவனின் வலது பாதம், சிவனுக்குரியதாகக் கருதப்படுகிறது. எனவே இங்கு நடராஜரை தன்பாதம் தூக்கிய நடராஜர்என்றும் அழைக்கிறார்கள. நடராஜர் வழிபாட்டிற்குரிய ஆறு நாட்களில், இவருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. சரபேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இராகு வேளையில் இவருக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர்.

அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில், உத்திரமேரூர்

அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில், உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

காலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு மணி 7 வரை திறந்திருக்கும்.

மூலவர்

பாலசுப்ரமணியன்

அம்மன்

கஜவள்ளி

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

உத்திரமேரூர்

மாவட்டம் காஞ்சீபுரம்
மாநிலம் தமிழ்நாடு

முனிவர்களின் தவத்துக்கு இடையூறாக இருந்த அசுரர்களைக் கொன்று, முனிவர்களைக் காத்தருள வேலாகி நின்ற வேலவனின் புகழ்பாடும் திருத்தலம் இளையனார் வேலூர். இளையனார் என்றால் முருகன், வேலூர் என்றால் முருகனின் வேல் விழுந்த இடம் என்பது பொருள். உத்திரவாகினி என்றும் சேயாறு என்றும் தற்போது செய்யாறு என்றும் அழைக்கப்படும் ஆற்றின் இருகரையோரமும் அக்காலத்தில் அடர்ந்த காடுகள் காணப்பட்டன. இங்கு பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். அவர்களுள் ஒருவரான காசிபமுனிவர், ஒருசமயம் உலக நலன் பொருட்டு சேயாற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து வேள்வி செய்யத் தொடங்கினார். அப்போது மலையன், மாகறன் என்ற அழியா வரம்பெற்ற அசுரர்கள் அவரது வேள்விக்கு இடையூறு விளைவித்தனர். இதுகுறித்து காசிப முனிவர், இறைவன் கடம்பநாதரிடம் முறையிட, அவருக்குக் காட்சி தந்த இறைவன், “கவலை வேண்டாம். எனது இளைய மகன் முருகனை அனுப்பி, அவ்விரு அசுரர்களையும் அழித்து, உங்களது வேள்விக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்வேன்என்று ஆசி கூறினார். கூடவே முருகனுக்கு துணையாக வாட் படையையும் அனுப்புவதாக கூறினார். தந்தை ஈசனின் கட்டளையை சிரமேற்று, காசிப முனிவரின் வேள்வியைக் காக்க வேலவன் விரைந்து புறப்பட்டான். முதலில் மலையனையும், மாகறனையும் அழைத்து நல்லுபதேசம் செய்தார். ஆனால் கர்வம் தலைக்கேறிய அவர்கள் முருகனின் நல்லுரையை ஏற்கவில்லை.