Category Archives: கணபதி ஆலயங்கள்

அருள்மிகு உச்சிஷ்ட கணபதி(பெரிய கணபதி) திருக்கோயில், திருநெல்வேலி

அருள்மிகு உச்சிஷ்ட கணபதி(பெரிய கணபதி) திருக்கோயில், புது

பைபாஸ் ரோடு அருகே திருநெல்வேலி 627 001.

+91 94433 68596, 94431 57065 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – உச்சிஷ்ட கணபதி

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – திருநெல்வேலி

மாவட்டம்: – திருநெல்வேலி

மாநிலம்: – தமிழ்நாடு

விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி. அவர் பிரம்மச்சாரி என்று ஒரு தகவல் இருக்க, ஒரு பெண்ணை கட்டித்தழுவி உள்ள கோலம் அபூர்வமானது. இதுவே உச்சிஷ்ட கணபதி வடிவமாகும். வடமாநிலங்களில் உச்சிஷ்ட கணபதிக்கு விளக்கம் தரும் போது, “பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்தவர்என்பர். இவரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே. கோயிலைச் சுற்றி இடிபாடுகளுடன் கூடிய மதில் சுவர்களின் நீள, உயரத்தைப் பார்த்தாலே இது புரியும்.

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த கோயில் இது. ராஜகோபுரத்தைக் கடந்ததும், நீண்ட வெட்டவெளியைக் கடந்து கோயிலுக்குள் செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் சிலைகள் ஏதும் இல்லை.

அருள்மிகு உச்சிப்பிள்ளையார் கோயில், திருச்சிராப்பள்ளி

அருள்மிகு உச்சிப்பிள்ளையார் கோயில், மலைக்கோட்டை, திருச்சிராப்பள்ளி-620 001.

+91-431- 270 4621, 270 0971, 271 0484

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்: – உச்சி பிள்ளையார்

தீர்த்தம்: – காவிரி

ஆகமம் : – சிவாகமம்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – திரிசிராப்பள்ளி

ஊர்: – திருச்சி

மாவட்டம்: – திருச்சி

மாநிலம்: – தமிழ்நாடு

ராமர் ராவணனை வதைத்து சீதையை மீட்டு அயோத்தி சென்றார். விபீடணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோரும் உடன் சென்றனர். அயோத்தியில் ராமர் முடிசூட்டு விழா முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப்பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீடணன் தெற்கே வந்தான். எழில் வனப்புடன் மிகுந்த சோலை நடுவே அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணிணான்.

அப்போது, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்து விட்டுச் சென்றான். விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அச்சிலையை பூமியில் வைத்து விட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார்.