அருள்மிகு உச்சிப்பிள்ளையார் கோயில், திருச்சிராப்பள்ளி

அருள்மிகு உச்சிப்பிள்ளையார் கோயில், மலைக்கோட்டை, திருச்சிராப்பள்ளி-620 001.

+91-431- 270 4621, 270 0971, 271 0484

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்: – உச்சி பிள்ளையார்

தீர்த்தம்: – காவிரி

ஆகமம் : – சிவாகமம்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – திரிசிராப்பள்ளி

ஊர்: – திருச்சி

மாவட்டம்: – திருச்சி

மாநிலம்: – தமிழ்நாடு

ராமர் ராவணனை வதைத்து சீதையை மீட்டு அயோத்தி சென்றார். விபீடணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோரும் உடன் சென்றனர். அயோத்தியில் ராமர் முடிசூட்டு விழா முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப்பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீடணன் தெற்கே வந்தான். எழில் வனப்புடன் மிகுந்த சோலை நடுவே அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணிணான்.

அப்போது, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்து விட்டுச் சென்றான். விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அச்சிலையை பூமியில் வைத்து விட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார்.

திரும்பி வந்து விபீடணன் சிறுவனைக் காணாமல் மலைத்து போனான். செய்வதறியாது பூமியில் இருந்த சிலையை எடுக்கப்பார்த்தும் அவனால் சிலையை நகர்த்த முடியவில்லை. இதனால் இலங்கைக்கு செல்ல இருந்த ரங்கநாதர், விநாயகரின் அருளால் திருவரங்கத்தில் எழுந்தருளினார்.

தான் சிலையை கொடுத்த அந்த சிறுவன் மலையில் அமர்ந்திருப்பதை பார்த்த விபீடணன் கோபமடைந்து, விநாயகர் தலையில் ஒரு குட்டு வைத்தான் என்பது வரலாறு. உச்சிப்பிள்ளையார் தலையில் இன்றும் அந்த குட்டின் வடு காட்சியளிக்கிறது.

திருச்சி என்றாலே மலைக்கோட்டை. அதன் அருகில் அகண்டகாவிரி. அடுத்து திருவரங்கம். இப்புனித தலத்தை உலகம் முழுவதும் இருந்து வரும் மக்கள் அனைவரும் தினமும் கண்டு களித்து வருகின்றனர்.

இக்கோயிலின் கட்டுமானப்பணி மிகவும் இன்றும் வியப்பூட்டுகிறது.

இக்கோயிலில் குடைந்தெடுக்கப்பட்ட இரண்டு குகைகள் உள்ளன. மேல் குகையில் கிரந்தத்திலும், தமிழிலும் கல்வெட்டு செய்திகள் உள்ளன. கீழ் குகையில் 104 செய்யுள்கள் அந்தாதியாக உள்ளன.

மலைக்கோட்டையின் மீது இருந்து பார்க்கையில், திருச்சி மாநகரின் எல்லா பக்கமும் ரம்மியமாக தெரியும். மலைக்கோட்டையின் உயரம் 275 அடி. மலைக்கோயிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. இப்படி வடிவமைக்கப்பட்ட கோயிலின் ஆயிரங்கால் புனித மண்டபம் சிறப்பு வாய்ந்தது. இங்கு இன்றும் திருமண வைபவங்கள் நடந்து வருவது மிகச்சிறப்பு.

திருச்சி மலைக்கோட்டை கடந்த 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த குணபரன் என்ற மகேந்திரவர்ம பல்லவர் ஆட்சியில் கட்டப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது.

இக்கோயிலின் கீழ் உள்ள தாயுமானவர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று. அப்பர், ஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், தாயுமான அடிகள் ஆகியோரால் பாடல் பெற்றது.

திருவிழா:- விநாயகர் சதுர்த்தி, ஆங்கிலப்புத்தாண்டு, தமிழ்புத்தாண்டு, பொங்கல்.

கோரிக்கைகள்:

எந்த காரியங்கள் தொடங்கினாலும் இவரை வணங்கி விட்டு தொடங்கினால் காரியங்களில் வெற்றி உறுதி

நேர்த்திக்கடன்

விநாயகருக்கு பால் முழுக்காட்டு செய்து அருகம்புல் மாலை சாற்றி வழிபடுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *