தவறு செய்தவர்கள் திருந்த
தவறு செய்தவர்கள் திருந்த
தவறு செய்தவர்கள் திருந்த, திருந்தவேண்டும் என்னும் மனம் வேண்டும். எதிலும் பிடிப்பற்றவர்களோ, அல்லது ஏதாவதொன்றில் கண்மூடித்தனமான பிடிப்பும் நியாயத்துக்குப் புறம்பான ஆசையும் இருந்தால்தான் தவறு செய்கிறார்கள். “தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் தப்பு செய்தவன் வருந்தியாகணும்.” – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
தொடர்ந்து புத்தகங்களை படிப்பவர்களுக்குத் தவறு செய்யும் எண்ணம் வராது. ஏதோ ஒரு காரணத்துக்காகத் தவறு செய்தவர்கள் மீண்டும் திருந்த முடியாது என சொல்ல முடியாது. தவறு செய்து விட்டோம் என வருந்தினால் போதும், அந்த நிமிடமே திருந்தியதாக அர்த்தம். தவறு செய்தால் திருந்த வாய்ப்பு வேண்டும் என்று இருக்காமல் நாமே சென்று மன்னிப்பு கேட்டால் திருந்தி விட்டோம்.
தவறு செய்தவர்களும் திருந்துவதற்கு தரப்பட்டிருக்கும் ஒரு வாய்ப்புதான் இந்த தான தர்ம காரியங்கள். இதனால் பாவங்கள் தீருமா? எவை தீருமோ அவை தீரும். எந்தத் தீவினைகளுக்கு பலனை அனுபவித்தே ஆக வேண்டுமோ, அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. நல்ல காரியங்கள் நல்லவர்கள்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. தீமை செய்தவர்களும், திருந்தி நல்ல வழியில் சென்று நற்காரியங்கள் புரிந்து வாழலாம்.
இறைவன், யாகம், பூசை, அபிஷேகம், அலங்காரம் ஆகியவற்றில் எதையுமே ஏற்றுக்கொள்வதில்லை. அவர் எப்போதும் திருப்தியாகவே இருப்பவர். பாவங்கள் நீங்குவதற்காக யாகங்கள் செய்பவர், மீண்டும் பாவங்களைச் செய்வாரேயானில் அதனால் எந்தப் பயனும் இல்லை. ‘தான் செய்தது தவறு, என்னை மன்னித்து ஏற்றுக்கொள்’ என்ற சரண் அடைந்து எவர் ஒருவர் கடவுளைத் தொழுகிறாரோ, அவரை, அவர் செய்த தர்மம் காப்பாற்றும். மேலும் தவறுகள் செய்வாரேயானில் தர்மம் கண்டிப்பாகக் காப்பாற்றாது.
இறைவனும், தன் மாபெரும் கருணையால் மக்கள் அனைவரும் நன்மை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்குடன், தீயவர்களையும் நல்ல காரியங்களைச் செய்விக்கச் செய்து அவர்களும் நலம் அடைய வழிகாட்டுகிறார். இறைவன், அனைத்தும் தெரிந்தவன். அவனை நமது ஆடம்பரங்களினால் ஏமாற்றிவிட முடியாது.
ஆகையால் மனம் திருந்தி கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடலாம்.
கைச்சின்னேஸ்வரர் | கச்சனம் | திருவாரூர் |
இராமநாதர் | திருக்கண்ணபுரம் | திருவாரூர் |
உத்திராபசுபதீஸ்வரர் | திருச்செங்காட்டங்குடி | திருவாரூர் |
ஏகாம்பரேஸ்வரர் | மானந்தகுடி | திருவாரூர் |
ஏகாம்பரேஸ்வரர் | செட்டிகுளம் | பெரம்பலூர் |
Leave a Reply