சனிதோஷ பாதிப்பு குறைய

சனிதோஷ பாதிப்பு குறைய

சனிக்கிரகம் நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கி தூர வீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று புராணங்கள் கூறும். இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர்.

இராவணனின் மகன் இந்திரஜித்து. இவன் பிறப்பதற்கு முன் சோதிடர்களை அழைத்து நல்ல முகூர்த்தவேளை குறிக்கும்படி இராவணன் கட்டளை இட்டான். அவன் கட்டளைப்படி சனீஸ்வரனை பதினோராம் வீட்டில் இருக்க முகூர்த்தம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்திரஜித் பிறக்கும் பொழுது சனி தனது ஒரு காலைப் பன்னிரண்டாம் வீட்டில் நுழைத்துவிட்டார். இதனால் சீற்றமடைந்த இராவணன் அவரின் ஒரு பாதத்தை துண்டித்தான் என்றும் கூறுவர்.

சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் இராசிக்கு 5இல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும், 12இல், 1இல், 2இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர். இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேக மெலிவு என்பன உண்டாம். இதைச் சனிதோஷம் என்பர். இவர்களே மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவறாது செய்தல் வேண்டும்.

சனீஸ்வரன் தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு கறுப்புத் துணி தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபடவேண்டும். துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சந்நிதானமடைந்து, சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.

சனிபகவானுக்குரிய இலை வன்னி இலை. இந்த இலையால் நவக்கிரக மண்டபத்திலுள்ள சனி
பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். சனி தோறும் நீலோற்பவ மலரால் சனி பகவானை அர்ச்சித்து வர பொன், பொருள் சேரும். திருமணத் தடை விலகும்.

மாற்றுத்திறனாளிகள், அவலட்சணமாக
இருப்பவர்களுக்கு உதவி செய்தால், மிகுந்த நன்மை தருவார்.

அஷ்டமச்சனி பரிகாரம்:
நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் இந்த மூன்று எண்ணெயையும் கலந்து, எட்டு முகம் வைத்த ஒரு இரும்பு விளக்கில் திரிபோட்டு சனீஸ்வரனுக்கு விளக்கேற்றி, அவரை வலம் வந்து வழிபட்டால் அஷ்டமச்சனி விலகிவிடும். நிம்மதி
பிறக்கும். வாழ்க்கை சந்தோஷமாகும்.
உடல் ஊனமுற்றவர்களுக்கு ஆடை தானம், அன்னதானம், குடை தானம், கைத்தடி தானம் என தான தர்மங்கள் செய்துவர சனிதோஷம் விலகி ஆயுள் வளரும். நோய் நொடிகள் தீரும்.
உங்கள் கடமையைச் சரிவரச் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறுவீர்கள்.

அக்னீஸ்வரர் திருக்கொள்ளிக்

காடு

திருவாரூர்
எந்திர சனீஸ்வரர் ஏரிக்குப்பம் திருவண்ணாமலை
ஏகாம்பரேஸ்வரர் சவுகார்பேட்டை சென்னை
கைலாசநாதர் மணக்கால் திருச்சி
கைலாசநாதர் ஸ்ரீவைகுண்டம் திருநெல்வேலி
காசி விஸ்வநாதர் இரும்பாடி சோழவந்தான் மதுரை
சனீஸ்வர பகவான் குச்சனூர் தேனி

சனீஸ்வரர்

கல்பட்டு

விழுப்புரம்

சனீஸ்வரன் மொரட்டாண்டி

விழுப்புரம்

தர்ப்பாரண்யேஸ்வரர் திருநள்ளாறு புதுச்சேரி
தாண்டேஸ்வரர் கொழுமம் கோயம்புத்தூர்
அக்னீஸ்வரர் நல்லாடை நாகப்பட்டினம்
கோழிக்குத்தி வான முட்டிப்பெருமாள் சோழன் பேட்டை நாகப்பட்டினம்
வாலீஸ்வரர் கோலியனூர் விழுப்புரம்
வேங்கட வாணன் பெருங்குளம், திருக்குளந்தை தூத்துக்குடி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *