Monthly Archives: February 2012

அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில், மேட்டுக்குப்பம்

அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில், மேட்டுக்குப்பம், வானகரம், திருவள்ளூர் மாவட்டம்.

+91- 94444 04201 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுவாமிநாத பாலமுருகன்
உற்சவர் பாலமுருகன்
தல விருட்சம் வன்னி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மேட்டுக்குப்பம், வானகரம்
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

வேடர் குலத்தலைவன் நம்பிராஜனின் மகளாக அவதரித்த வள்ளி, தினைப்புனம் நிறைந்த திருத்தணியில் தோழியருடன் தங்கியிருந்தாள். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இறைவனுக்கு கிடையாது. ஏற்கனவே உயர் இனத்து தெய்வானையை மணம் முடித்த முருகப்பெருமான், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த வள்ளியையும் ஆட்கொள்ள முடிவு செய்தார்.

மனிதனாகப் பிறந்தவர்கள் இந்த உலக இன்பங்கள் நிரந்தரமானதென்றும், நிஜமானதென்றும் கருதி, மரணத்தைப் பற்றியே அக்கறையே இல்லாமல், இங்கேயே மூழ்கிக் கிடக்க எண்ணுகிறார்கள். தினைப்புனம் என்பது உலக இன்பத்தைக் குறிக்கும். அதில் மூழ்கிக் கிடந்தாள் வள்ளி. இவ்வாறு அறியாமல் மூழ்கிக் கிடக்கும் உயிர்களையும் தானே வலியத் தேடிச்சென்று ஆட்கொள்ள வருகிறான் இறைவன். முருகனும் வள்ளியை ஆட்கொள்ள வலிய வந்தார். இறை சிந்தனையே இல்லாத உயிர்கள் அவனைச் சிந்திப்பதே இல்லை. இது முருகனைக் கண்டு வள்ளி ஒதுங்கி ஓடியதைக் குறிக்கிறது. பின்னர் விநாயகர் உதவியுடன் அவளை மணந்தார். இது கந்தபுராணக்கதை,

ஆனால், கர்ண பரம்பரையாக மற்றொரு செய்தி கூறப்படுகிறது.

அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில், சுருளிமலை

அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில், சுருளிமலை, கம்பம், தேனி மாவட்டம்.

+91- 4554- 276715,93452 61022

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுருளிவேலப்பர்

(சுருளி ஆண்டவர்)

உற்சவர்

வேலப்பர்

தீர்த்தம்

சுரபிதீர்த்தம்

பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

சுருதிமலை

ஊர்

சுருளிமலை

மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

மகாவிஷ்ணுவின் மகளான வள்ளியை, மலையரசனான நம்பிராஜன் வளர்த்தார். அவளை முருகப்பெருமான் மணந்து கொண்டார். திருமணச் சீராக நம்பிராஜன், தனது ஆட்சிக்குட்பட்ட மலைப்பிரதேசங்களைக் கொடுத்தார். அதில் இதுவும் ஒன்று. இம்மலையில் முருகப்பெருமான் குடிகொண்டார். ஒருசமயம் சனி பகவான், தன் சஞ்சாரப்படி தேவர்களைப் பிடிக்க வேண்டியிருந்தது. தேவர்கள், தங்களைக் காத்தருளும்படி இங்குள்ள முருகனை தஞ்சமடைந்தனர். சுவாமி அவர்களுக்கு அடைக்கலம் தந்து காத்தருளினார். இத்தலத்தில் இனிய சுருதியுடன் அருவி கொட்டுவதால், “சுருதிஎனப்பட்ட தீர்த்தம், “சுருளிஎன மருவியது. முருகனுக்கும் சுருளி வேலப்பர்என்ற பெயர் ஏற்பட்டது. ஆண்டிக்கோலத்தில் இருப்பதால் இவர், “சுருளியாண்டிஎன்றும் அழைக்கப்படுகிறார்.

இராவணேஸ்வரன் தனது தவத்தால் அண்டசராசரங்கள் அனைத்தையும் ஆளும்படி வரம் பெற்று, தேவர்களை கொடுமைப்படுத்தினான். அவனுக்கு முடிவு கட்ட எண்ணிய தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் ஆகியோர் இங்குள்ள கைலாசநாதர் குகையில் மகாவிஷ்ணு தலைமையில் ஆலோசனை செய்தனர். அவர்களை அழிக்க இராவணேஸ்வரன் தனது அரக்கர் படையுடன் இங்கு வந்தான். தேவர்களைக்காக்க மகாவிஷ்ணு பூதசொரூபத்துடன் பஞ்சபூதங்களாக விண்ணுக்கும் மண்ணுக்குமாக நின்றார். அவரது கோலத்தை கண்டு பயந்த இராவணேஸ்வரன் தன் அரக்கர் படையுடன் திரும்பி ஓடினான். இவ்வாறு தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் தவம் புரிந்த கைலாசகுகையின் மேல் பகுதியில் சுருளிவேலப்பர் அருள் புரிகிறார்.