Monthly Archives: December 2011

அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை

அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை, தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435- 294 1912, 94435 86453, 93443 30834 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் அர்ச்சகரை அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.

தற்பொழுது ஆலயம் அதிகாலை முதல் இரவு வரை பக்ததர்கள் வசதிக்காக திறந்து விடப்படும் அலை பேசி எண் 9843606985,சு.செந்தமிழ்செல்வன் விஜயமங்கை

மூலவர் விஜயநாதேஸ்வரர் (விஜயநாதர்)
அம்மன் மங்கள நாயகி (மங்கை நாயகி, மங்களாம்பிகை)
தீர்த்தம் அர்ஜுன தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவிசயமங்கை
ஊர் திருவிஜயமங்கை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

மகாபாரத போரின்போது பாண்டவர், கவுரவர் படையினர் ஒருவருக்கொருவர் நிகராக போரிட்டுக் கொண்டிருந்தனர். இவ்வேளையில், வேதவியாசர் அர்ஜுனராகிய விஜயனிடம், சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி விஜயன் சிவனை வேண்டித் தவமிருந்தான். இதையறிந்த, துரியோதனர் முகாசுரனை அனுப்பி தவத்தை கலைக்க முயன்றார். பன்றி வடிவில் வந்த அசுரனை, விஜயன் வீழ்த்தினான். அங்கு வந்த ஒரு வேடன், தானே பன்றியை வீழ்த்தியாகச் சொன்னார். இருவருக்கும் வாக்குவாதம் உண்டானது. அவ்வேளையில், சுயரூபம் காட்டிய சிவன், பாசுபத அஸ்திரம் கொடுத்தார். அருகிலிருந்த அம்பாள் சிவனிடம், “ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு விஜயன் தகுதிபெற்றவன்தானா?” என்றாள் சந்தேகத்துடன். சிவன் அவளிடம், “விஜயன் மஸ்யரேகை (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே, அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்என்றார். விஜயனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளை காட்டினாராம். அதன்பின் அம்பாள் சம்மதிக்கவே சிவன் பாசுபத அஸ்திரத்தை அவனிடம் கொடுத்தார். விஜயன், தனக்கு அருள் செய்ததைப்போல இங்கிருந்து அருளும்படி வேண்டவே, இங்கு எழுந்தருளிய சிவன் விஜயநாதர்என்று பெயர் பெற்றார். தலத்திற்கும் திருவிஜயமங்கைஎன்ற பெயர் ஏற்பட்டது.

சோழர்கால முறைப்படி கட்டப்பட்ட கோயில். இங்கு கருவறைக் கோபுரம் பெரியதாகவும், ராஜகோபுரம் சிறியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் மங்கள நாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் அபய முத்திரையும், பின் இரண்டு கைகளில் ஒரு கையில் அட்சரமாலையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். மூலவர் கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் அருளுகின்றனர். அளவில் சிறிய இக்கோயிலில் கோபுரம் கிடையாது.

அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்புறம்பியம்

அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்புறம்பியம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91 435 2459519, 2459715, 94446 26632, 99523 23429 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாட்சி நாதேஸ்வரர், சாட்சீஸ்வரர், புன்னைவனநாதர்
அம்மன் கரும்பன்ன சொல்லி
தல விருட்சம் புன்னை
தீர்த்தம் பிரமதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்புறம்பயம், கல்யாண மாநகர், புன்னாகவனம்
ஊர் திருப்புறம்பியம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

பிரளய வெள்ளம் வந்தபோது புறம்பாய் இருந்தமையால் புறம்பயம்என்று பெயர். இரத்தினவல்லி என்னும் ஒரு வணிக குலத்துக் கன்னிப் பெண் தனக்கென்று உறுதிசெய்யப் பெற்றிருந்த கணவனுடன் திருமணமாகுமுன் இவ்வூருக்கு வந்தாள். அப்பொழுது கணவனை பாம்பு கடித்து இறந்தமையால் அவள் வருந்தியழுதாள். அவ்வூருக்கு வந்திருந்த திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடி அவனை எழுப்பியருளி, இரத்தினவல்லிக்கு திருமணம் செய்து வித்தார். இறைவன் சான்றாக நின்றருளினார். இதனால் இறைவனுக்கு சாட்சிநாதர்என்று பெயர் பெற்றார். இதற்கு வன்னிமரமும் ஒரு சான்றானது. வன்னிமரம் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது, சாட்சி சொன்ன வரலாறு திருவிளையாடற் புராணத்திலும், தலபுராணத்திலும் வருகிறது. இத்தலத்திலுள்ள பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகசதுர்த்தியன்று தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தேன் வெளிவராது. மற்ற நாள்களில் திருமுழுக்கு இல்லை. தெட்சிணாமூர்த்திக்குரிய 24 முக்கியத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும். அகத்தியர், பிரமன், சனகாதி நால்வர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்ட தலம். அரித்துவசன் என்னும் அரசனுக்குத் துர்வாச முனிவர் சாபத்தால் ஏற்பட்ட முயலக நோய் நீங்கிய தலம். கோவிலுக்கு விறகு கொண்டுவந்த ஒரு ஏழைக்கு இறைவன் தெட்சிணாமூர்த்தி ரூபமாகத் தரிசனம் கொடுத்தார். கோவிலின் கிழக்கேயுள்ள குளக்கரையில் இத்தெட்சிணாமூர்த்தியுள்ளார்.