Monthly Archives: December 2011

அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி

அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி, தஞ்சாவூர் மாவட்டம்

+91 435 245 4421, 245 4026 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருவலஞ்சுழிநாதர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவலஞ்சுழி
ஊர் திருவலஞ்சுழி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு, தேவர்களும், அசுரர்களும் இணைந்து, பார்கடலில் அமுதம் கடைந்தனர். வாசுகியானது மந்திர மலையின் பாரம் தாங்காமல், தனது கொடிய விஷத்தைப் பாற்கடலில் கக்கியது. அதன்படி கக்கப்பட்ட ஆலகால விஷத்தின் கொடுமை தாங்காது தேவர்களும் அசுரர்களும் ஈசனிடம் சென்று முறையிட்டனர். ஈசன் அவர்களிடம், எந்த செயல் செய்யும் முன்பு விநாயகரை வழிபட வேண்டும். எனவே நீங்கள் விநாயகப் பெருமானை வழிபட்டால் தடையின்றி அமுதம் கிடைக்க பெறுவீர்கள் என அருளினார். தேவர்களுடன் அசுரர்களும், பாற்கடலை அடைந்து கடல் நுரையினை சேர்த்து விநாயகர் வடிவமாக செய்து வழிபட்டனர். அதன்பின் பாற்கடலைக் கடைந்து, அமுதம் கிடைத்து மகிழ்ந்தனர். விநாயகர் பாற்கடலில் உள்ள அமுதமயமான கடல் நுரையினால் உருவானதால் சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்)” எனப் பெயர் பெற்றார். தேவர்களினால் தோற்றுவிக்கப்பட்டமையால் இவ்விநாயகர் தேவர்களின் ஆத்மார்த்த பூஜா மூர்த்தியாக இருந்து அருள்பாலித்து வருகிறார்.

அருள்மிகு சோமேசர் திருக்கோயில், பழையாறை

அருள்மிகு சோமேசர் திருக்கோயில், பழையாறை, பட்டீஸ்வரம் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91 – 98945 69543 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சோமநாதர்
அம்மன் சோமகலாம்பிகை
தல விருட்சம் நெல்லி
தீர்த்தம் சோம தீர்த்தம், கருட தீர்த்தம், சடாயு தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பழையாறை வடதளி, ஆறைவடதளி
ஊர் கீழ்பழையாறை வடதளி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

முன்னொரு காலத்தில் கருடன் தன் தாயின் அடிமைத்தனம் நீங்க, தேவேந்திரனிடம் அமிர்த கலசம் பெற்று, இத்தலத்தின் வழியே வந்தான். இதைக்கண்ட அசுரர்களுக்கும், கருடனுக்கும் சண்டை மூண்டது. குடத்திலிருந்து மூன்று துளிகள் நெல்லிவனமான இத்தலத்தில் சிந்தின. அத்துளிகள் சிவலிங்கம், அம்பிகை, தீர்த்தம் ஆகிய மூன்றாயின. கருடன், தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், அம்பிகையையும் வழிபட்டு உய்ந்தது. கருடன் தனியே தன்பெயரால் உண்டாக்கிய தீர்த்தம் சடாயு தீர்த்தம் என வழங்கப்படுகிறது. சந்திரன் இத்தல இறைவனை வழிபட்டுக் கலைகள் வளரவும், கயரோகம் நீங்கவும் அருள்பெற்ற தலம். அப்பர் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை. சிதலமான கோயில் உள்ளது. கோயிலுக்குப் பக்கத்தில் துறையூர் சிவப்பிரகாசர் சமாதியுள்ளது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இத்தலத்திற்கு உள்ளது. தல புராணம் 15 அத்தியாயங்கள் கொண்டது.


சோழர் திருப்பணி பெற்ற கோயில். கிழக்கு பார்த்த சன்னிதி. எதிரில் குளம் இன்று சீர்கெட்டுள்ளது. வெளிப்பிரகாரத்தில் அம்பாள் கோயில் தெற்கு நோக்கியுள்ளது. கோயில் முன்மண்டபத்தில் உள்ள கைலாசநாதர் உருவமும், மகாமண்டபத்தில் உள்ள துர்கை உருவமும் அழகுடையன.
பிற்காலச் சோழர் ஆட்சியில் இத்தலம் இரண்டாவது தலைநகராய் சிறந்து விளங்கியது.