Monthly Archives: June 2011

அருள்மிகு வாகனப் பிள்ளையார் திருக்கோயில், ஆத்தூர்

அருள்மிகு வாகனப் பிள்ளையார் திருக்கோயில், ஆத்தூர், சேலம் மாவட்டம்

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – விநாயகர்

பழமை: – 200 வருடங்களுக்கு முன்

ஊர்: – ஆத்தூர்

மாவட்டம்: – சேலம்

மாநிலம்: – தமிழ்நாடு

ஆத்தூர் நகரத்தில் வசிட்ட நதி ஓடுகிறது. இன்று வறண்டு கிடந்தாலும் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் பெருகி ஓடிய நதியாகத்தான் இருந்தது. குறிப்பாக ஆடி மாதத்தில் மிக அதிக அளவில் தண்ணீர் ஓடும். 200 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிள்ளையார் சிலை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. அதைக் கண்டெடுத்த மக்கள், ஊருக்குள் ஓரிடத்தில் பிரதிட்டை செய்தனர். வெள்ளத்தில் மிதந்து வந்த பிள்ளையார் என்பதால், “வெள்ளம் பிள்ளையார்என்று பெயரும் சூட்டினர். காலப் போக்கில் அவர் வெள்ளைப் பிள்ளையார் ஆனார்.

அருள்மிகு உச்சிஷ்ட கணபதி(பெரிய கணபதி) திருக்கோயில், திருநெல்வேலி

அருள்மிகு உச்சிஷ்ட கணபதி(பெரிய கணபதி) திருக்கோயில், புது

பைபாஸ் ரோடு அருகே திருநெல்வேலி 627 001.

+91 94433 68596, 94431 57065 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – உச்சிஷ்ட கணபதி

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – திருநெல்வேலி

மாவட்டம்: – திருநெல்வேலி

மாநிலம்: – தமிழ்நாடு

விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி. அவர் பிரம்மச்சாரி என்று ஒரு தகவல் இருக்க, ஒரு பெண்ணை கட்டித்தழுவி உள்ள கோலம் அபூர்வமானது. இதுவே உச்சிஷ்ட கணபதி வடிவமாகும். வடமாநிலங்களில் உச்சிஷ்ட கணபதிக்கு விளக்கம் தரும் போது, “பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்தவர்என்பர். இவரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே. கோயிலைச் சுற்றி இடிபாடுகளுடன் கூடிய மதில் சுவர்களின் நீள, உயரத்தைப் பார்த்தாலே இது புரியும்.

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த கோயில் இது. ராஜகோபுரத்தைக் கடந்ததும், நீண்ட வெட்டவெளியைக் கடந்து கோயிலுக்குள் செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் சிலைகள் ஏதும் இல்லை.