Monthly Archives: June 2011

அருள்மிகு பதினெட்டுக்கை(அஷ்டதசபுஜ) மகாலட்சுமி துர்க்கை திருக்கோயில், குறிச்சி

அருள்மிகு பதினெட்டுக்கை(அஷ்டதசபுஜ) மகாலட்சுமி துர்க்கை திருக்கோயில், குறிச்சி -614 602 புதுக்கோட்டை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்:- பதினெட்டுக்கை(அஷ்டதசபுஜ)மகாலட்சுமி

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – குறிச்சி

மாவட்டம்: – புதுக்கோட்டை

மாநிலம்: – தமிழ்நாடு

 

பட்டுக்கோட்டை அறந்தாங்கி ரோட்டில் பட்டுக்கோட்டையிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் குறிச்சி என்ற கிராமத்தில் தனராமலிங்க தேவர் என்பவர் குடும்பத்தோடு வசித்து வந்தார்.

ஆன்மிகவாதியான அவர் ஏழை மக்களுக்கு மருத்துவ வசதியையும், சோதிடம், பரிகாரம் செய்தல் ஆகிய பணிகளையும் செய்துவந்தார். அப்போது அருகிலுள்ள பாலத்தளி கிராமத்தினர் தனராமலிங்கத்தேவரை சந்தித்து துர்க்கையம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த வழிகேட்டனர். அவரது பெரும் முயற்சியால் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.

ஒரு வெள்ளிக்கிழமை இரவில் அசரீரி ஒலித்தது. அவரிடம், “ஒரு குறிப்பிட்ட இடத்தில், உன் மனதில் உள்ளபடி எனது தோற்றத்தை சிலையாக வடித்து தயாராக வை. சித்தர் ஒருவர் உன்னை தேடி வருவார். அவரது ஆலோசனைப்படி சிலையை வைக்கலாம்,” என கூறியது.

அருள்மிகு அட்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர், சென்னை

அருள்மிகு அட்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர்-600 090. சென்னை.

+91- 44-2446 6777, 2491 7777, 2491 1763

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்: அட்டலட்சுமி, மகாலட்சுமி,திருமால்

தாயார்: ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி,கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விசயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி

தீர்த்தம்: சமுத்திர புஷ்கரணி(வங்கக் கடல்)

பழமை : 25 வருடங்களுக்கு முன்

ஊர் : பெசன்ட் நகர்

மாவட்டம் : சென்னை

மாநிலம் : தமிழ்நாடு

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக ஆனது. அதோடு சென்னை பெசன்ட் நகர் கடற்கரை மிகவும் புகழ் பெற்றது.

இந்த கடற்கரைக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளதால் பக்தர்கள் தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.