Monthly Archives: June 2011

அருள்மிகு மும்பாதேவி கோயில், மும்பை

அருள்மிகு மும்பாதேவி கோயில், மும்பை -400 002, மகாராட்டிர மாநிலம்
*********************************************************************************

+91 22 2242 4974 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மும்பாதேவி

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – முங்கா

ஊர்: – மும்பை

மாவட்டம்: – மும்பை

மாநிலம்: – மகாராட்டிரம்

ஒரு காலத்தில் மும்பையைச் சுற்றியிருந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது இயற்கையின் சீற்றங்களால் மிகவும் அல்லல்பட்டனர். அதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள இறைவனை வேண்டினர்.

பராசக்தியான அம்பிகை அவர்களுக்கு அருள்புரிந்தார். இயற்கைச் சீற்றம் தணிந்தது. “முங்காஎன்ற மீனவ இனத்தினர் அம்பிகைக்கு கோயில் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

மற்றொரு கதையின்படி முங்கா என்பவர்கள் மீனவ பெண்கள் என்றும், தங்கள் கணவன்மார் கடலுக்குசென்றுவிட்டு நல்லபடியாகத் திரும்ப அம்பிகையை வேண்டியதாகவும், முங்கா என்ற பெயர் நாளடைவில் திரிந்து மும்பா என மாறிவிட்டதாகவும் தெரியவருகிறது. இந்த தேவியின் உண்மையான பெயர் முங்கா தேவிஎன இருந்தது. காலப்போக்கில் மும்பா தேவிஎன மாறிவிட்டது.

அருள்மிகு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில், ஆலப்புழை

அருள்மிகு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில், ஆலப்புழை – 688001, ஆலப்புழை மாவட்டம், கேரளா மாநிலம்.

+91- 477 – 226 2025, 225 1756

காலை 5 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – ராஜராஜேஸ்வரி , முல்லைக்கல் பகவதி

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்: – ஆலப்புழை

மாவட்டம்:- ஆழப்புழா

மாநிலம்: – கேரளா

செண்பகசேரி அரசனுக்கு இத்தலம் அரண்மனையாக இருந்தது. இவ்வரசன் காலத்தில் இத்தலத்தில் அம்பாள் பெண்ணாக, வனதுர்க்கையாக அவதரித்து, அவளது சகோதரியுடன் முல்லைக்கொடி அருகே தினமும் விளையாடி வந்தாள்.

ஒரு முறை அந்தக் கொடி அருகே அம்மனின் விக்ரகம் கிடைத்தது. ஆரம்பத்தில் துர்க்கையாக இருந்தவள், பின்னர் பிரசன்னத்தில் இவள் அன்னதானப் பிரபு என்பதை அறிந்தனர். எனவே இவளுக்கு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி என்ற திருநாமம் சூட்டி இத்தலத்திலேயே பிரதிட்டை செய்யப்பட்டாள்.

அம்பாள் அசரீரியாக மன்னனிடம், தான் இங்கு முல்லைக் கரை அருகே அருள்பாலிப்பதாவும், கோயில் கட்டி பிரதிட்டை செய்யும்படியும் கூறினார். மன்னனும் அப்படியே கோயில் கட்டி அம்பாளை பிரதிட்டை செய்யும்போது கருவறையின் மேல்பகுதி மூடப்பட்டது. அன்று இரவே மேல்கூரை தீப்பிடித்தது.

பிரசன்னம் கேட்டபோது, தான் குழந்தை வடிவில் இருப்பதாகவும், சூரியன், சந்திரன், நட்சத்திரம், ஆகாயம், காற்று, மழை ஆகியவற்றை நான் நேரடியாகப் பார்த்து அனுபவிக்க வேண்டுமெனவும், மேற்கூரை இல்லாமல் கருவறையை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டதால் இக்கோயிலுக்கு மேற்கூரை கிடையாது.

இங்கு 5 அடி உயர அம்மன் மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

மழை காலத்தில் ஒரு சிறு ஓலை வைத்து கூரையை மூடுகிறார்கள். இந்த உலகையே ஆளும் அம்மன் மழையிலும், வெயிலிலும் நிற்கிறாள்.

திருவிழாவின்போது, 41 நாளும் அம்மனுக்கு சந்தன அபிசேகம் நடைபெறும். இங்கு கணேசர், முருகன், கிருட்டிணர், ஆஞ்சநேயர், ஐயப்பன், நவக்கிரகம் ஆகிய சன்னதிகள் உள்ளன.

கார்த்திகை முதல் தேதி முதல் மார்கழி 11 வரை 41 நாள் களபாபிஷேகம்(சந்தனம்) நடக்கும்.

மார்கழி 1 முதல்11 வரை உள்ள தேதிகளில் சிறப்பு பூசை, அர்ச்சனை நடக்கும்.

மார்கழி 11ம் தேதி பீமா ஜுவல்லரி பூசை.

சரசுவதி பூசை நாட்களில் நவராத்திரித் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

தினமும் பஞ்சாமிர்த அபிசேகம் நடைபெறும்.

திருமண தடை நீங்கவும், குழந்தைச் செல்வம் கிடைக்கவும் வேண்டிக்கொள்கின்றனர்.

கோரிக்கை நிறைவேறியவுடன் அம்மனுக்கு சந்தனத்தில் அலங்காரம் செய்கிறார்கள்.