Monthly Archives: June 2011

அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில், சிருங்கேரி

அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில், சிருங்கேரி – 577 139, சிக்மகளூர் மாவட்டம். கர்நாடகா மாநிலம்.

+91 8265 – 250 123, 250 192 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 2 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாரதாம்பாள்
தீர்த்தம் துங்கபத்ரா
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் சிருங்கேரி
மாவட்டம் சிக்மகளூர்
மாநிலம் கர்நாடகா

மாகிஷ்மதி நகரில் மண்டனமிசிரர் என்ற விசுவரூபரிடம் ஆதிசங்கரர் வேதம் குறித்து வாதம் செய்தார். வாதத்திற்கு விசுவரூபரின் துணைவி உபயபாரதி நடுவராக இருந்தார். இவர் சரசுவதி தேவியின் அவதாரம். வாதத்தில் சங்கரர் தோற்றால் துறவறம் விடுத்து இல்லறம் மேற்கொள்ள வேண்டும். விசுவரூபர் தோற்றால் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் நிபந்தனை.

வாதம் ஆரம்பிக்கும் முன் சங்கரருக்கும் விசுவரூபருக்கும் மாலைகளை அணிவித்து, யாருடைய மாலை முதலில் வாடுகிறதோ அவரே தோற்றவர் என அறிவிக்கப்பட்டது.

அருள்மிகு சாமாண்டியம்மன் திருக்கோயில், சாமாண்டிபுரம்

அருள்மிகு சாமாண்டியம்மன் திருக்கோயில், சாமாண்டிபுரம் – 625 516, கம்பம், தேனி மாவட்டம்.

+91- 99441 16258, 97893 42921 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 – மதியம் 1.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாமாண்டியம்மன்
தல விருட்சம் மஞ்சள் அரளி, செவ்வரளி
தீர்த்தம் சுரபி தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் கம்பம் சாமாண்டிபுரம்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

முன்னொருகாலத்தில் வளையல்காரர் ஒருவர், இவ்வழியாக வியாபாரம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, இவ்விடத்தில் இருந்த புற்றில் இருந்து ஒரு பெண்ணின் கை மட்டும் வெளியே நீண்டது. வளையல்காரரோ அதிர்ந்து விட்டார். அப்போது,”ஐயா. என் கையில் வளையல் போடுங்கள்என்று ஒரு அசரீரி ஒலித்தது. பயந்த வளையல்காரர் இங்கிருந்து ஓடிவிட்டார்.

அவர் இவ்வழியாக திரும்பி வரும்போதும், அதேபோலவே கை நீண்டு தனக்கு வளையல் அணிவிக்கும்படி கேட்டது. வளையல்காரரும் பயத்திலேயே கையில் அணிவித்தார். பின் ஊருக்குள் வந்த வளையல்காரர் நடந்ததைக் கூறவே, மக்கள் இங்கு வந்தனர். அப்போது ஒரு பக்தர் வாயிலாக தோன்றிய சாமுண்டீசுவரி, தானே புற்றில் குடியிருப்பதாகக் கூறினாள். எனவே, மக்கள் இங்கு சாமுண்டீசுவரிக்கு கோயில் கட்டினர்.

இத்தலத்தில் அம்பிகை புற்று வடிவில் அருள்பாலிக்கிறாள். இத்தலத்தில் வளையல் பிரசாதமாகத் தரப்படுகிறது. பிரகாரத்தில் விநாயகர், முருகன், கருப்பசாமி, ராக்காச்சி ஆகியோர் இருக்கின்றனர்.