Category Archives: நாகப்பட்டினம்

அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில், வைகல் மாடக்கோயில், ஆடுதுறை

அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில், வைகல் மாடக்கோயில், ஆடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 435 – 246 5616 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வைகல்நாதர் (செண்பகாரண்யேஸ்வரர்)
அம்மன் கொம்பியல்கோதை (சாகா கோமளவல்லி)
தல விருட்சம் செண்பகம்
தீர்த்தம் செண்பக தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வைகல்மாடக்கோயில்
ஊர் திருவைகல்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்

முன்னொரு காலத்தில் பூமி தேவி, தன்னை விரும்பி மணம் செய்து கொள்ளுமாறு திருமாலை வேண்டினாள். இவளது வேண்டுகோளை ஏற்ற பெருமாள், பூமிதேவியைத் திருமணம் செய்து கொண்டார். இதனால் மகாலட்சுமிக்கு பெருமாள் மீதுகோபம் ஏற்பட்டது. எனவே இலட்சுமி தேவி செண்பகவனம் எனும் இத்தலத்தை அடைந்து கடும் தவம் செய்தாள். பெருமாளும், பூமி தேவியும் பிரிந்து போன இலட்சுமியை காண இத்தலம் வந்தனர். இவர்களை தேடி வந்த பிரம்மனும் இத்தல இறைவனை வழிபட்டார். சிவனின் திருவருளால் பெருமாள், இலட்சுமி, பூமாதேவி இருவரையும் மனைவியராகப்பெற்றார்.

கோச்செங்கண்ணன் கட்டிய மாடக்கோயிலில் இதுவும் ஒன்று. வைகல் என்ற ஊரில் கட்டப்பட்ட மாடக்கோயிலாக விளங்குவதால் வைகல் மாடக்கோயில்ஆனது. இவ்வூரில் சிவனது மூன்று கண்ணைப்போல் மூன்று கோயில் உள்ளன. வலக்கண்ணாக விசாலாட்சி உடனாகிய விஸ்வநாதர் கோயில், இடக்கண்ணாக பெரியநாயகி உடனுறை பிரமபுரீஸ்வரர் கோயில், நெற்றிக்கண்ணாக கொம்பியல் கோதை உடனாகிய வைகல் நாதர் திருக்கோயில். இந்த மூன்று திருக்கோயிலுமே பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலமாகும்.

அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், இலுப்பைபட்டு

அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், இலுப்பைபட்டு, மணல்மேடு, மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91-92456 19738 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருநீலகண்டேஸ்வரர், படிகரைநாதர்
அம்மன் அமிர்தவல்லி, மங்களாம்பிகை
தல விருட்சம் இலுப்பை
தீர்த்தம் பிரம்ம, அமிர்த தீர்த்தம்
ஆகமம் காரணாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பழமண்ணிப்படிக்கரை, மதூகவனம்
ஊர் இலுப்பைபட்டு
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, இங்கு சிலகாலம் தங்கியிருந்தனர். சிவபூஜை செய்ய விரும்பிய அவர்கள், இங்கு தேடிப்பார்த்தும் இலிங்கம் கிடைக்கவில்லை. எனவே, அவர்கள் ஐந்து பேரும் ஒரு இலுப்பை மரத்தின் அடியில், இலுப்பைக்காயில் விளக்கேற்றி, சிவனை மமனதில் எண்ணி வணங்கினர். சிவன் அவர்கள் ஐந்து பேருக்கும் தனித்தனி மூர்த்தியாகக் காட்சி தந்தார். அவர்கள் சிவனிடம், தங்களுக்கு அருளியதைப்போலவே இங்கிருந்து அருள் செய்ய வேண்டுமென வேண்டிக்கொண்டனர். சிவனும் ஐந்து மூர்த்திகளாக எழுந்தருளினார். தற்போதும் இக்கோயிலில் ஐந்து இலிங்கங்கள் தனித்தனி சன்னதியில் இருக்கிறது.

தர்மர் வழிபட்ட சிவன் நீலகண்டேஸ்வரர், அர்ஜுனன் வழிபட்ட சிவன் படிகரைநாதர், பீமனால் வழிபடப்பட்டவர் மகதீஸ்வரர், நகுலன் வழிபட்டவர் பரமேஸ்வரர், சகாதேவன் வழிபட்டவர் முத்துகிரீஸ்வரர் என்ற பெயர்களில் அருளுகின்றனர். இவர்களில் நீலகண்டேஸ்வரர், படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. படிகரைநாதர் சன்னதியிலேயே மங்களாம்பிகை தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். பீமன் வழிபட்ட சிவன், சோடஷலிங்கமாக, 16 பட்டைகளுடன் இருக்கிறார். பதினாறு செல்வமும் பெற இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஐந்து மூர்த்திகளும் மூலவராக இருந்தாலும், நீலகண்டேஸ்வரர், படிகரைநாதர் இருவரும் பிரதான மூர்த்திகளாக வணங்கப்படுகின்றனர். இவர்களுக்கு எதிரில் மட்டுமே நந்தி இருக்கிறது. சகாதேவன் வழிபட்ட முத்துகிரீஸ்வரர், தெற்கு நோக்கி இருக்கிறார். சாஸ்திரம், ஜோதிடம் கற்பவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கின்றனர்.

பாற்கடலைக் கடைந்தபோது, வாசுகி பாம்பு களைப்பில் விஷத்தை கக்கியது. தேவர்களைக் காப்பதற்காக விஷத்தை சிவன் விழுங்கினார்.