Category Archives: திருவள்ளூர்

திருவேட்டீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி

அருள்மிகு திருவேட்டீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி, சென்னை.

+91-44 -2841 8383, 2851 1228

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருவேட்டீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் செண்பகாம்பிகை
தல விருட்சம் செண்பக விருட்சம்
தீர்த்தம் செண்பக தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவல்லிக்கேணிசென்னை
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

அர்ஜுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட சமயத்தில், ஒரு பன்றியை வேட்டையாடினான். சிவபெருமான் வேடன் வடிவில் சென்று, அது தனக்குரியது என்று சொல்லி அவனை சண்டைக்கு இழுத்தார். அவருடன் போரிட்ட அர்ஜுனன் அம்பு எய்யவே, சிவனின் தலையை பதம் பார்த்தது. ரத்தம் வழிய நின்ற வேடன், சுயரூபம் காட்டினார். வருந்திய அர்ஜுனன் மன்னிப்பு வேண்டினான்.

சிவன் அவனை மன்னித்ததோடு, பாசுபதாஸ்திரம் கொடுத்தருளினார். அதன்பின், அவன் பல இடங்களில் சிவவழிபாடு செய்தான். அவன் இத்தலத்திற்கு வந்தபோது, இங்கும் சுயம்புலிங்கத்தைக் கண்டு வழிபட்டான். வேடன் வடிவில் வந்து அர்ஜுனனுக்கு அருள் புரிந்தவர் என்பதால், இவர் திருவேட்டீஸ்வரர்என்று பெயர் பெற்றார்.

தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை

அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை, திருவள்ளூர் மாவட்டம்.

+91- 98407 97878

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தெட்சிணாமூர்த்தி
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் திருவொற்றியூர்சென்னை
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு சித்தர் ஒருவர், இங்கு வேதபாடசாலை அமைத்து, மாணவர்களுக்கு வேதம் கற்பித்து வந்தார். அப்போது வேதத்தின் வடிவமாகத் திகழும் தெட்சிணாமூர்த்திக்கு, இங்கு சிலை வடித்து, கோயில் எழுப்பினார். தென் திசை கடவுளான தெட்சிணாமூர்த்தி, தெற்கு நோக்கித்தான் இருப்பார். ஆனால் இங்கு இவர் வடக்கு நோக்கியிருப்பது, வேறெங்கும் காண முடியாத அமைப்பு. எனவே தலம், “வடகுருதலம்எனப்படுகிறது. நவக்கிரகங்களில் குரு பகவான், வடக்கு நோக்கி காட்சியளிப்பதன் அடிப்படையில் இவ்வாறு பிரதிஷ்டை செய்ததாகச் சொல்கிறார்கள். குபேரனின் திசையான வடக்கு நோக்கியிருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. முன்மண்டபத்தில் ஒரு பாண லிங்கம் இருக்கிறது. தெட்சிணாமூர்த்திக்கு பூஜை நடக்கும்போது, இந்த இலிங்கத்திற்கும் பூஜை செய்யப்படும்.