Category Archives: திருவள்ளூர்

குறுங்காலீஸ்வரர் (குசலவபுரீஸ்வரர்) திருக்கோயில், கோயம்பேடு

அருள்மிகு குறுங்காலீஸ்வரர் (குசலவபுரீஸ்வரர்) திருக்கோயில், கோயம்பேடு, சென்னை.

+91-44 – 2479 6237

காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் குறுங்காலீஸ்வரர், குசலவபுரீஸ்வரர்
அம்மன் தர்மசம்வர்த்தினி
தீர்த்தம் குசலவ தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கோயம்பேடு
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

அயோத்தியில் இராமபிரான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, சீதையின் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் பேசினர். சீதையின் கற்பை நிரூபிக்க இராமர் அவளை வனத்திற்கு அனுப்பினார். வால்மீகி ஆசிரமத்தில் தங்கிய அவள், இலவன், குசன் என்னும் 2 மகன்களை பெற்றெடுத்தாள். இராமர் தனது தந்தை என தெரியாமலேயே, இலவகுசர் வளர்ந்தனர். இந்நேரத்தில் இராமபிரான், அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அங்கு வால்மீகி முனிவரின் உத்தரவின் பேரில் சென்ற இலவகுசர், மனைவி இல்லாமல் அஸ்வமேத யாகம் நடத்துவது சாஸ்திர விரோதம் என்பதாலும், சீதாவை காட்டுக்கு அனுப்பி விட்டதை அறிந்தும் இராமபிரான் மீது கோபமடைந்து தாங்கள் வசித்த வனத்துக்கே திரும்பி விட்டனர்.

கற்பக சௌந்தரி உடனுறை கற்பகேஸ்வரர் திருக்கோயில், முகப்பேர்

அருள்மிகு கற்பக சௌந்தரி உடனுறை கற்பகேஸ்வரர் திருக்கோயில், முகப்பேர், சென்னை

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு, பல காலம் பூஜிக்கப்பட்டு, சில நூறு ஆண்டுகள் பூமிக்குள் புதைந்து கிடந்து, சில காலத்திற்கு முன் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம்.

அழுக்காக; பாசிபடர்ந்து; சில சமயம் சிதைந்து பின்னமாகிக்கூட இருக்கலாம் என்றுதானே நினைத்தீர்கள்? ஆனால் இந்த இலிங்கம், மிகவும் கம்பீரமாக நேற்று வடிக்கப்பட்டது போன்ற வனப்புடன் காட்சியளிக்கிறது.

சென்னை முகப்பேர் பகுதியில் உள்ளது இந்த ஆலயம். புரான காலத்தில் மகப்பேறு என்றழைக்கப்பட்ட தலம்தான் இன்று மருவி முகப்பேர் ஆகியுள்ளது. இந்த ஆலயத்தின் பெயர், “கற்பக சௌந்தரி உடனுறையும் கற்பகேஸ்வரர் திருக்கோயில்.”