Category Archives: திருச்சி

அருள்மிகு மாசி பெரியண்ணசுவாமி திருக்கோயில், ஓமாந்தூர்

அருள்மிகு மாசி பெரியண்ணசுவாமி திருக்கோயில், ஓமாந்தூர், திருச்சி மாவட்டம்.

+91 4327-235 640 (மாற்றங்களுக்குட்பட்டது)

திங்கள், வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 முதல் பகல் 2 மணி வரை திறக்கப்படும்.

மூலவர்

ஏகாம்பரேஸ்வரர்

தாயார்

அன்ன காமாட்சி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

ஓமாந்தூர்

மாவட்டம்

திருச்சி

மாநிலம்

தமிழ்நாடு

காராளன் என்ற பத்து வயது சிறுவன் கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள ஜெம்பு ஏரி பகுதியில் (தற்போதைய புளியஞ்சோலை) 800 ஆண்டுகளுக்கு முன் பெற்றோருடன் வசித்து வந்தான். இவனது தொழில் மாடு மேய்ப்பது. அப்போது, கொல்லிமலையிலுள்ள பெரியண்ண சுவாமியை மலையாள மக்கள் பூஜித்து வந்தனர். அவர்கள் விசேஷமாகச் செய்யும் பூஜைகளில் குறிப்பிட்டவர்களைத் தவிர மற்றவர்கள் பங்கேற்க அனுமதிப்பதில்லை. மலையாள பூஜாரியார் மகனும், காராளனும் நண்பர்கள். ஒருமுறை காராளன், பூஜையைக் காண விருப்பம் தெரிவித்தான். யாரும் அறியாமல் பரண் அமைத்து அவர்கள் பூஜையை பார்த்தனர். அப்போது அருள் வந்த மலையாள பூஜாரி, “நம்முடைய தெய்வீக அந்தரங்கங்களை அந்நியன் ஒருவன் பார்த்து அறிந்து கொண்டான். அவனை வெட்டுங்கள்என உத்தரவிட்டார். காராளன் பிடிபட்டு தண்டனையை மறுநாள் காலை நிறைவேற்றுவதற்காக ஓரிடத்தில் சிறை வைக்கப்பட்டான். அவன் பெரியண்ண சுவாமி, அன்ன காமாட்சி அம்மனின் பக்தன். தனது நிலை குறித்து சுவாமியிடம் வேண்டினான். இரவில் தன்னை மறந்து உறங்கும்போது, கனவில் வந்த பெரியண்ண சுவாமி, இங்கிருந்து தப்பி இரவோடு, இரவாக உன் மாடுகளுடன் தென்திசை சென்றுவிடு; ஒவ்வொரு இரவும் தங்கி, பின் தொடர்ந்து பயணம் செய். எந்த இடத்தை விட்டு மாடுகள் போகாமல் சுற்றி வருகிறதோ, அங்கு நான் கோயில் கொள்வேன். அந்த இடத்தில் நீயும் உன் சந்ததியினரும் எனக்கு கோயில் கட்டி பூஜை செய்ய வேண்டும்என்று கூறி மறைந்தார். அதன்படி காராளன் அங்கிருந்து தப்பி தன் பெற்றோருடன் ஒரு குன்னிமரத் தோட்டத்துக்கு வந்தனர். அங்கே மாடுகள் சுற்றி சுற்றி வந்தன. அப்போது பேரிரைச்சலுடன் சுழற்காற்று வீசியது. மாடுகள் கதறின. காராளன் இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டான். அன்னகாமாட்சி அம்மனும், மாசி பெரியண்ண சுவாமியும் அசரீரியாக, “நாங்கள் இங்கே தங்கியுள்ளோம், நீங்களும் இங்கேயே பாதுகாப்பாக தங்கிக் கொள்ளலாம்என்று கூறியதைத் தொடர்ந்து காராளன் அங்கு தங்கினான். தொடர்ந்து அப்பகுதியில் கோயில் கட்டப்பட்டது. துரையூர் ஜமீன்தார் மண்டபங்களை கட்டினர். அவர்கள் தங்கிய இடமே ஓமாந்தூர். ஓமாந்தூரில் தங்கிய தெய்வங்களுக்கு சிலைகள் எதுவும் வடிக்கப்படவில்லை. அன்னகாமாட்சியம்மன், பெரியண்ண சுவாமி, ஏகாம்பரேஸ்வரர், தேவராய சுவாமி, கவுதாரி அம்மன், முனீஸ்வரர், கரட்டடியான், பச்சைநாச்சி அம்மன், சண்டிகேஸ்வரர், லாடப்ப சன்னாசி, மதுரை வீரன், புதுகருப்புசாமி, பச்சாயி அம்மன், காத்தவராயன், பைரவர் ஆகியோருக்கு தனிசந்நிதிகளும், மாசிகருப்பண்ணசுவாமி, நல்லேந்திர சுவாமி, ஜலகண்டேஸ்வரர், அப்பச்சியாயி குப்பச்சியாயி ஆகியோருக்கு ஒரு சந்நிதியும் உள்ளன. ஆனால், விக்ரகங்கள் எதுவும் இல்லை. உள்ளே விளக்கு மட்டும் எரிகிறது.

அருள்மிகு குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், உறையூர்

அருள்மிகு குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், உறையூர், திருச்சி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

தான்தோன்றீஸ்வரர்

தாயார்

குங்குமவல்லி, காந்திமதி

தல விருட்சம்

வில்வம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

உறையூர்

மாவட்டம்

திருச்சி

மாநிலம்

தமிழ்நாடு

சூரவாதித்த சோழ மன்னன் ஒருமுறை நாகலோகம் சென்றான். அங்கிருந்த காந்திமதி என்ற நாககன்னிகையின் மீது அவனுக்கு காதல் ஏற்பட்டது. அவள் சிவபக்தை. தினமும் திருச்சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் தாயுமான சுவாமியை வணங்க வரும் வழக்கம் உடையவள்.
நாகலோகத் தலைவரான ஆதிசேஷனின் அனுமதி பெற்று காந்திமதியை சூரவாதித்தன் மணந்து கொண்டான். திருமணத்துக்கு பிறகும் மலையிலுள்ள சிவனை வணங்க காந்திமதி தவறவில்லை.
இந்நிலையில் அவள் கர்ப்பவதியானாள். அவளுக்கு மலையேற மிகவும் சிரமமாக இருந்தது. இந்த கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல், அவள் மலையேறத் தவறவில்லை. ஏற்கனவே, காவிரிக்கரையில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, “தாயும் ஆனவன்எனப் பெயர் பெற்ற சிவபெருமான், தன் பக்தையான காந்திமதியின் மீது இரக்கம் கொண்டார். ஒருநாள் காந்திமதியால் நடக்க முடியவில்லை. வயிற்றுப் பாரத்தையும் சுமந்து கொண்டு மலையில் எப்படி ஏறுவது என தவித்தாள். அவள் மீது இரக்கம் கொண்ட சிவன், தானே அங்கு தோன்றினார். “மகளே. காந்திமதி, கலங்காதே; இனி உனக்கு பிரசவம் ஆகும் வரை, நீ மலைக்கு வந்து என்னை தரிசிக்க வேண்டாம். இங்கேயே உனக்காக நான் இலிங்கவடிவில் அமர்வேன். நீ இவ்விடத்திலேயே என்னை வணங்கித் திரும்பலாம்” என்றார்.
தானாக உன் முன் தோன்றிய எனக்கு தான் தோன்றீஸ்வரர்என்ற திருநாமம் ஏற்படும். என் மனைவி பார்வதிதேவி, உன் போன்ற பெண்களுக்கு தாயாய் இருந்து பிரசவம் பார்ப்பாள். குங்குமம் காப்பாள். அவளுக்கு குங்குமவல்லிஎன்ற திருநாமம் ஏற்படும்என்றார். காந்திமதி மகிழ்ச்சியடைந்து பிரசவ காலம் வரை அங்கு வந்து இறைவனை வணங்கி, அழகிய குழந்தையைப் பெற்றெடுத்தாள். இங்குள்ள அம்மன் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்மன் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள்.