Category Archives: சேலம்

அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆத்தூர்

அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆத்தூர், சேலம் மாவட்டம்.

+91- 4282 – 320 607 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீர ஆஞ்சநேயர்
தல விருட்சம் அரசமரம்
தீர்த்தம் வசிஷ்ட தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ஆத்தூர்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

சீதையை, இராவணன் கடத்திச்சென்றபோது அவளைத்தேடி தென்திசை நோக்கி சென்ற இராமர் இவ்வழியாக சென்றார். நீண்ட தூரம் வந்த அவர், இத்தலத்திற்கு அருகில் இருக்கும் மலை மீது ஏறி, சீதாதேவி இருக்கிறாளா? என்று பார்த்தார். அங்கு சீதையை காணாததால் வருத்தத்துடன் சிறிது நேரம் ஓரிடத்தில் அமர்ந்தார். தன் தலைவன் இராமன் சோகமாக இருப்பதைக் கண்ட ஆஞ்சநேயர், “இராமருக்கு எந்த வகையில் நாம் உதவி செய்வதுஎன வசிஷ்ட நதியின் கரையில் அமர்ந்து சிந்தனை செய்தாராம். இவ்விடத்தில் அவர், “வீரஆஞ்சநேயராககோயில் கொண்டுள்ளார். இராமர் அமர்ந்து சென்றதாக கருதப்படும் மலை இத்தலத்திற்கு அருகில் உள்ளது.

சூரியனின் மகன் சனி, சனியின் மகன் குளிகன். ஆஞ்சநேயர், சூரியனின் சிஷ்யன். இவரே சனிக்கு அதிபதியான பெருமாளின் ஆஸ்தான சீடர். எனவே, இவரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு சனிக்கிழமைகளில் குளிகை நேரத்தில் சனிதோஷ பரிகாரபூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. இப்பூஜையில் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வணங்கினால் சனிதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில், கஞ்சமலை

அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில், கஞ்சமலை, சேலம் மாவட்டம்.

+91 – 427- 249 1389 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சித்தேஸ்வரர்
தீர்த்தம் காந்ததீர்த்த குளம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் கஞ்சமலை
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

காலங்கி சித்தர் என்பவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலையை பிரதிஷ்டை செய்த போகரின் குரு ஆவார். திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர். கூடுவிட்டுக் கூடு பாய்வது உள்ளிட்ட அஷ்டமாசித்திகளை அறிந்தவர். ஏழு மடங்களை ஸ்தாபித்தவர்.

கஞ்சம்என்றால் தாமரைஎனப் பொருள். மேலிருந்து பார்த்தால் தாமரை போன்ற தோற்றமுடையதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். அனுமான் சஞ்சீவி மலையுடன், தென் இலங்கைக்கு செல்லும் வழியில், அதன் ஒரு பகுதி மிகமிக குறைந்த அளவில் கீழே விழுந்ததாகவும், அதுவே கஞ்சமலை ஆயிற்று என்றும் சொல்வர். குறைந்து விழுந்ததால் கஞ்சம்என்ற பொருளிலும் இந்த மலைக்கு பெயர் வந்திருக்கலாம்.

காலாங்கி சித்தரும், அவருடைய குரு திருமூலரும் மலைப்பகுதிகளில் மூலிகை தேடி அலைந்தனர். அவ்வாறு மூலிகை தேடி அலையும் போது கஞ்சமலைக்கும் வந்தனர். திருமூலர், தன் சிஷ்யன் காலாங்கியை சமைக்கச் சொல்லி விட்டு, மூலிகை தேடி காட்டுக்குள் போய்விட்டார். அரிசி வெந்து கொண்டிருந்த போது, அதைக் கிளறுவதற்கு அகப்பை ஏதும் இல்லாததால், அருகிலுள்ள ஒரு செடியிலிருந்து ஒரு குச்சியை ஒடித்துக் கிளறினார். அவ்வளவு தான் சோறு கருப்பாகி விட்டது.