Category Archives: கோயம்புத்தூர்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பொள்ளாச்சி

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.

காலை 7 மணி 10 முதல் மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுப்பிரமணிய சுவாமி

அம்மன்

வள்ளி, தெய்வானை

பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர்

பொள்ளாச்சி

மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

விவசாய வளம் கொழிக்கும் செழிப்பான ஊர் பொள்ளாச்சி. இவ்வூரின் பெயர்க் காரணங்களை இரண்டு விதமாகக் கூறுகின்றனர். தமிழகத்தில் உள்ள வாரச் சந்தைகளில் பொள்ளாச்சி வாரச்சந்தை பெயர் பெற்ற சந்தையாகும். சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்து மட்டும் அல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் பொருட்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் வருவர். அப்படிப் பொருட்களின் புழக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் பொருள் ஆட்சிஎன்ற பெயர் ஏற்பட்டு அது நாளடைவில் மருவி பொள்ளாச்சிஎன வழங்கலாயிற்று. இவ்வூரில் மரம், செடி, கொடிகள் செழித்து வளர்ந்து சோலைகளாக பரிமளித்தது. சோலைகள் பொழில்கள் என வழங்கப்பட்டன. சிற்றூர்களை வாய்ச்சி என அழைப்பர். பொழில்களுக்கு இடையில் அமைந்த வாய்ச்சி பொழில்வாய்ச்சிஎன வழங்கப்பட்டு நாளடைவில் இப்பெயர் மருவி பொள்ளாச்சிஎன வழங்கலாயிற்று என்றும் கூறுவர்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் கொங்கு சுந்தர பாண்டியன், கொங்கு திரிபுவனச் சக்ரவர்த்தி விக்ரமசோழன் ஆகிய அரசர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதை கல்வெட்டு குறிப்புகள் மூலம் அறியலாம். தெற்குச் சுவரில் கொச்சி அரச பரம்பரையைச் சார்ந்த மன்னர் பெரும் படப்பு சொரூபத்தின் ஆறாம் ஆண்டு ஆட்சி கல்வெட்டு ஒன்றுள்ளது. இதில் இக்கோயிலின் பெயர் திருவகத்தீஸ்வர முடையார் கோயில்எனக் காணப்படுகிறது. எனவே இத்தலம் சிவத்தலமாக இருந்திருக்ககூடும் என்ற குறிப்பு உள்ளது.

அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில், அனுவாவி

அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில், அனுவாவி, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91-94434 77295, 98432 84842 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுப்ரமணியர்

தலவிருட்சம்

மாமரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

அனுவாவி

மாவட்டம்

கோயம்புத்தூர்

மாநிலம்

தமிழ்நாடு

ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைச் சுமந்து கொண்டு இந்த மலை வழியாக வரும் போது, அவருக்குத் தாகம் ஏற்பட்டது. அவர் இம்மலையில் உள்ள முருகப்பெருமானை வேண்டினார். அனுமனின் வேண்டுதலுக்கு மனமிரங்கிய முருகன், தன் வேலால் ஒரு இடத்தில் குத்த, அந்த இடத்திலிருந்து தண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. அனுமான் தாகம் தீர்ந்தார். கந்தப் பெருமான் வழிபாடு இராமாயண காலத்திலேயே இருந்துள்ளது என்பதற்கு வால்மீகி ராமாயணம் எடுத்துக்காட்டு. இராமன் விட்ட அம்புகள் கந்தனின் வேல் போல் பிரகாசித்ததாக 2 இடங்களில் சொல்லப் பட்டுள்ளது.


ஹனுஎன்றால் ஆஞ்சநேயர். “வாவிஎன்றால் ஊற்று, நீர்நிலை என்று பொருள். அனுமனுக்காக தோன்றிய ஊற்றாதலால் இத்தலம் ஹனுவாவிஎன்று பெயர் பெற்று தற்போது அனுவாவிஆகிவிட்டது. அனுமனுக்கு குமரன் அருள்பாலித்ததால் அனுமக்குமரன் மலைஎன்ற பெயரும் உண்டு.

இங்குள்ள ஊற்று நீரின் ஆரம்பம் எங்குள்ளது என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை. அதனால், மைசூர் மன்னன் ஒருவன் இங்குள்ள ஊற்றை காணாச்சுனைஎன பட்டயத்தில் குறிப்பிட்டுள்ளான். எந்த காலத்திலும் வற்றாத இந்த புனித நீர் பக்தர்களின் தாகம் தீர்க்கிறது. திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் சுவாமியின் சிரசில் பூ வைத்து, ஒரு செயலைத் துவங்கலாமா என பார்க்கும் பழக்கம் உள்ளது.