Category Archives: கேரளா

பூர்ணத்திரயேஸ்வரர் திருக்கோயில், திருப்பூனித்துறை

அருள்மிகு பூர்ணத்திரயேஸ்வரர் திருக்கோயில், திருப்பூனித்துறை, எர்ணாகுளம் மாவட்டம், கேரளா மாநிலம்.

+91- 484 – 277 4007

காலை 4 மணி முதல் 11.15 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பூர்ணத்திரயேஸ்வரர்
தீர்த்தம் பல்குண தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருப்பூனித்துறை
மாவட்டம் எர்ணாகுளம்
மாநிலம் கேரளம்

இப்பகுதியில் வாழ்ந்த ஒரு அந்தணர் தம்பதிக்கு நெடுங்காலமாகக் குழந்தை இல்லை. அந்தணருக்கு கடவுள் பக்தி கிடையாது. அவரது மனைவியோ விஷ்ணு பக்தை. தன் கணவனை மன்னித்து, தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என மனைவி அவரை வழிபட்டு வந்தாள். ஆனாலும், பெருமாள் மலடி என்ற இவளது பட்டத்தை தீர்க்கும் வகையில் குழந்தை பாக்கியத்தை தந்தாரே தவிர, பிறந்த குழந்தைகள் எதுவும் பிழைக்கவில்லை. ஒன்பது குழந்தைகள் பிறந்து இறந்தன. இதனால் அந்தணருக்கு பெருமாள் மீது கோபம் இன்னும் அதிகமானது. அந்தணரின் மாமனார், “மருமகனே. தாங்கள் பெருமாளிடம் கோபப்படுவதில் அர்த்தமில்லை. உங்களுக்கு அவர்மீது பக்தி இல்லாததே குழந்தைகளின் மரணத்திற்கு காரணம். பெருமாளை சரணாகதி அடைந்தால் இனிமேல் பிறக்கும் குழந்தை இறக்காதுஎன்றார். ஆனாலும், அந்தணர் அதைக் கண்டுகொள்ளவில்லை. அந்தணரின் மனைவி, தன் கணவன் திருந்தாததையும், பெருமாள் தன்னைச் சோதிப்பதையும் எண்ணி வேதனையில் தவித்தாள்.

மம்மியூர் மகாதேவன் திருக்கோயில், குருவாயூர்

அருள்மிகு மம்மியூர் மகாதேவன் திருக்கோயில், குருவாயூர், திருச்சூர், கேரளா மாநிலம்.

+91 – 487- 255 425

காலை 6 மணி முதல் 11-30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மகாதேவன்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் குருவாயூர்
மாவட்டம் திருச்சூர்
மாநிலம் கேரளா

கிருஷ்ணபகவான் தன் அவதாரம் முடித்து வைகுண்டம் சென்றதும் துவாரகை நகரம் கடலில் மூழ்கியது. கிருஷ்ணனால் வடிவமைக்கப்பட்ட அவரது சொந்த வடிவம் கொண்ட விக்ரகம் கடலில் மிதந்தது. அதை குரு பகவானும், வாயுவும் சுமந்துகொண்டு, பூலோகத்தில் அதை பிரதிஷ்டை செய்வதற்குரிய இடத்தை தேடி அலைந்தனர். அவர்கள் பரசுராமனால் உருவாக்கப்பட்ட கேரளப் பகுதிக்கு வந்தனர். அங்கிருந்த உருத்ர தீர்த்தக்கரையில் விக்ரகத்தை வைத்தனர். அவ்விடத்தில் சிவபெருமான் குடிகொண்டிருந்தார். தன் கோயிலின் அருகிலேயே மகாவிஷ்ணுவின் சிலையும் இருக்கட்டும் என அவர் அருள்பாலித்தார். அவ்வூரே குருவாயூர் ஆயிற்று. சிவபெருமான் குடியிருந்த தலம் மகிமை பொருந்தியது என்பதால், “மகிமையூர்என அழைக்கப்பட்டு காலப்போக்கில் மம்மியூராக மாறிவிட்டது.

கேரள பாணியில் ஓடு வேய்ந்த இக்கோயிலில், மகாவிஷ்ணு, கணபதி, சுப்ரமணியன், சாஸ்தா, பிரம்மராட்சஸ், நாகங்கள், பகவதியம்மன் ஆகியோருக்கு சன்னதி உள்ளது.