Category Archives: கரூர்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கரூர்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கரூர் கரூர் மாவட்டம்.
***********************************************************************

+91-4324- 246 0146 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன்(மகாமாரி)

பழமை: – 100 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – கருவூர்

ஊர்: – கரூர்

மாவட்டம்: – கரூர்

மாநிலம்: – தமிழ்நாடு

இத்திருக்கோயில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பாகத்தான் தோன்றியது.

கிரமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து இத்திருக்கோயில் தற்சமயம் உள்ள இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இது சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தாற்போல உள்ள பெரியதொரு வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

வைகாசிப் பெருந்திருவிழாவின் போது நடக்கும் கம்பம் நடும் விழா மிகவும் சிறப்பானது.

அருள்மிகு மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறாள்.

பூச்சொரிதல்:

இக்கோயிலில் விசேச அபிசேக ஆராதனையுடன் கம்பத்துக்குத் தயிர் சாதம் படைத்து சாமி கும்பிடுவார்கள். தயிர் சாதப் படையல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், மேட்டு மகாதானபுரம்

அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், மேட்டு மகாதானபுரம் -639 106, கிருஷ்ணராயபுரம், கரூர் மாவட்டம்.
*********************************************************************************************************

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மகாலட்சுமி

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர்: – கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம்

மாவட்டம்: – கரூர்

மாநிலம்: – தமிழ்நாடு

பெருமிழலை நகரை ஆண்ட மன்னரின் பெயர் சிவபெருமான். இவரிடம் பணிபுரிந்தவர் குரும்பநாயனார். இவர் 63 நாயன்மார்களில் ஒருவர். அந்த ஊர் மக்கள் பக்தியில் சிறந்து விளங்கினர். குரும்பநாயனார் சுந்தரமூர்த்தி நாயனாரை வணங்கி வந்தார். அவரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டார். இவர் ஆடி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் குரும்ப இனத்தில் பிறந்தார்.

தினமும் சிவனடியார்களுக்கு வேண்டிய உணவு, உடை மற்றும் பொருட்களை ஒரு கம்பளியில் கட்டி எடுத்துவந்து ஊர் எல்லையில் கொடுத்து அனுப்புவதை முதல் கடமையாகக் கொண்டிருந்தார்.

குரும்ப இனத்தவரின் தொழில் ஆடு மேய்ப்பது ஆகும். ஆட்டின் முடியில் செய்த கம்பளியில் அந்த பொருட்களை எடுத்து வருவார். எல்லாரிடமும் பணிவாக நடந்து கொள்வார்.

இறைவனின் பாதங்களைத் தன் நெஞ்சில் வைத்து வணங்குவதே தன் கடமை என எண்ணி வாழ்ந்து வந்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் மீது அன்புகொண்டு வணங்கி வந்ததால் இவருக்கு அட்டமாசித்திகள் கிடைத்தன. “நமசிவாயஎன்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓயாமல் ஓதி வந்தார்.