Category Archives: இராமநாதபுரம்

அருள்மிகு நம்புநாயகி அம்மன் திருக்கோயில், தனுக்(ஷ்)கோடி

அருள்மிகு நம்புநாயகி அம்மன் திருக்கோயில், தனுக்(ஷ்)கோடி, ராமேசுவரம் – 623 526,
************************************************************************************************
ராமநாதபுரம் மாவட்டம்.
************************

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நம்புநாயகி அம்மன்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் தனுக்(ஷ்)கோடி
மாவட்டம் ராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

இங்கு தட்சிணத்துருவன், பச்சிமத்துருவன் என்ற இரண்டு முனிவர்களின் கடுமையான தவத்தை கண்டு தேவி பர்வதவர்த்தனி காளிவடிவில் நேரில் காட்சியளித்தார். தென்கிழக்கு முகமாக காட்சியளித்ததால் தட்சிண காளியாகப் பெயர் பெற்றார். அன்றிலிருந்து இரண்டு முனிவர்களும் அந்த காட்டிலேயே காளியை வழிபட்டு வந்தார்கள். அவளின் அருளால் பிணியுற்றவர்களுக்கு நோய்போக்கும் பணியை செய்து வந்ததார்கள்.

இது தகவல்.

இரண்டு முனிவர்களும் கற்பகோடி காலம் வாழ்ந்து, குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு இப்பகுதியிலேயே சமாதியிலிருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது.

ராமேசுவரம் சிங்களர்களின் பிடியில் இருந்தபோது சூலோதரன் என்ற சிங்கள மன்னன் இந்த தீவின் வடக்கு பகுதியில் உள்ள உயரமான மண் குன்றில் கோட்டை ஒன்றை அமைத்து ஆட்சிசெய்து வந்தான். அந்த மன்னனுக்கு தீராத நோய் கண்டு எந்த மருத்துவமும் பயனளிக்காத நிலையில் தட்சிண காளியின் கோயிலுக்கு வந்து சேர்ந்தான்.

உடன் இருந்த சகோதரர்கள், மற்றும் அமைச்சர்களின் கேலிப்பேச்சுக்கு இடையில் மிகுந்த நம்பிக்கையுடன் தட்சிண காளியே கதி என்று முடிவு செய்த சூலோதரன், காளிஅம்மன் வீற்றிருந்த குடிசையின் அருகிலேயே ஒரு சிறிய குடிலை அமைத்து அங்கேயே தங்கினான்.

கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள நன்னீர் தடாகங்களில் நீராடிக் காளியை வணங்கிவர முற்றிலும் நோய் நீங்கி நலமடைந்தான். நம்பி வந்து வணங்கியதால் துயர்துடைத்த தட்சிண காளி அம்மனுக்கு சிறிய அளவில் கோயில் ஒன்றை அமைத்த சூலோதரன், தன்னைப்போல் தீராத பிணிகளுடன் வரும் பக்தர்கள் தங்கி நலமடைந்து செல்லப் பல வசதிகளையும் செய்து கொடுத்தான். காளியைக் கேலி செய்தவர்கள் பெரும் நோய்க்கு ஆளானார்கள். எனவே,”நம்பு நாயகியை வணங்கினால் வம்பில்லைஎன்ற சொலவடை உருவாயிற்று.

அருள்மிகு முத்தால பரமேசுவரியம்மன் திருக்கோயில், பரமக்குடி

அருள்மிகு முத்தால பரமேசுவரியம்மன் திருக்கோயில், பரமக்குடி – 623 707. ராமநாதபுரம் மாவட்டம்.

+91- 4564 – 229 640, +91- 94434 05585 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – முத்தால பரமேசுவரியம்மன்

உற்சவர்: – முத்தாலம்மன்

தல விருட்சம்: – கடம்ப மரம்

தீர்த்தம்: – வைகை

ஆகமம்: – சிவாகமம்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – பரமக்குடி

மாவட்டம்: – ராமநாதபுரம்

மாநிலம்: – தமிழ்நாடு

முற்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட மன்னன் ஒருவன், விநோதமான போட்டி ஒன்றை அறிவித்தான். சிறிய துளையுடைய முத்துக்களை, கையால் தொடாமலேயே மாலையாக தொடுக்க வேண்டுமென்பதே போட்டி. அந்நாட்டில் வசித்த அறிஞர்கள் பலரும், மாலை தொடுக்க முயன்று, முடியாமல் தோற்றனர். அவ்வூரில் வசித்த வியாபாரி ஒருவரின் மகள், தான் மாலை தொடுப்பதாகக் கூறினாள். மன்னனும் சம்மதித்தான்.

அரசவைக்குச் சென்ற அப்பெண், ஓரிடத்தில் பாசி மணிகளை வரிசையாக அடுக்கினாள். மறுமுனையில், சர்க்கரைப் பாகு தடவிய நூலை வைத்தாள். சர்க்கரையின் வாசனை உணர்ந்த எறும்புகள், பாசிமணியின் துளை வழியே உள்ளே சென்று, நூலை இழுந்து வந்தன.

சமயம் பார்த்து காத்திருந்த அப்பெண், நூலை எடுத்து மாலை தொடுத்தாள். மகிழ்ந்த மன்னன், மதிநுட்பமான அப்பெண்ணை பாராட்டிப் பரிசு வழங்கியதோடு, அவளையே மணக்க விரும்பினான். அப்பெண் மறுத்தாள். மன்னன் அவளைக் கட்டாயப்படுத்தினான்.