Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப்பள்ளி

அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப்பள்ளி, கோயிலடிப் பாளையம், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91-4364- 292 309 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருமேனியழகர்
அம்மன் வடிவாம்பிகை
தல விருட்சம் கண்ட மரம், தாழை
தீர்த்தம் மயேந்திர தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமகேந்திரப் பள்ளி
ஊர் மகேந்திரப் பள்ளி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

இந்திரன், கவுதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டதால், அவரிடம் உடம்பெல்லாம் கண்ணாகும்படி சாபம் பெற்றான். விமோசனத்திற்காக பூலோகம் வந்த அவன், பல தலங்களில் இலிங்கப் பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டான். அதில் ஒன்று மகேந்திரப்பள்ளியாகும். சிறப்பு மிக்க (மகா)இந்திரன் வழிபட்டதால், “மகேந்திரப்பள்ளிஎன்ற சிறப்பு பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.

சிவன், அம்பாள் இருவரும் மிகவும் அழகாக காட்சி தருகின்றனர். எனவே சுவாமி, “திருமேனி யழகர்என்றும், அம்பாள் வடிவாம்பிகைஎன்றும் அழைக்கப்படுகின்றனர்.

இங்கு வந்த திருஞானசம்பந்தர், சுவாமியை, “அழகர்எனக் குறிப்பிட்டு பாடியிருக்கிறார். மதுரை அருகிலுள்ள அழகர் கோவிலில் உள்ளபெருமாள் சுந்தரராஜன்என்று சமஸ்கிருதத்திலும், “அழகர்என்று தமிழிலும் வழங்கப்படுகிறார். அதுபோல, இத்தலத்தில் சிவன் அழகர்என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

அருள்மிகு சிவலோகத் தியாகராஜ சுவாமி திருக்கோயில், ஆச்சாள்புரம், சீர்காழி

அருள்மிகு சிவலோகத் தியாகராஜ சுவாமி திருக்கோயில், ஆச்சாள்புரம், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 – 278 272 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சிவலோகத்தியாகர்
உற்சவர் திருஞான சம்பந்தர்
அம்மன் திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதி நாயகி
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் பஞ்சாக்கர, பிருகு, அசுவ, வசிஷ்ட, அத்திரி, சமத்கனி, வியாச மிருகண்டு தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சிவலோகபுரம், நல்லூர்பெருமணம், திருமண நல்லூர், திருமணவை
ஊர் ஆச்சாள்புரம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

சீர்காழியில் சிவபாத இருதயரின் மகனாக அவதரித்தவர் சம்பந்தர். இவருக்கு 16 வயது நடக்கும் போது, இவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி தந்தை கூறினார். முதலில் மறுத்த சம்பந்தர், பின் இறைவனின் விளையாட்டு தான் இதுஎன்று சம்மதித்தார். மயிலாப்பூரில் சிவநேச செட்டியாரின் மகளைப் பெண் பார்த்து முடித்தனர். அவள் திடீரென இறந்து போனாள். அவளுக்கு உயிர் கொடுத்த சம்பந்தர் அவளைத் தன் மகளாக ஏற்றார். அப்பெண் இறைப்பணியில் மூழ்கி விட்டார். இதன்பிறகு, சிவபாத இருதயர், நல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்பியின் மகள் மங்கை நல்லாளை நிச்சயித்தார்.

ஞானசம்பந்தரும் மணக்கோலம் பூண்டார். ஆச்சாள்புரம் கோயிலில் திருமணம் நடக்க இருந்தது. திருநீலக்க நாயனார் மணவிழா சடங்குகளை செய்தார். சம்பந்தர் அக்னியை வலம் வரும் போது,”இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே; இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன்என்று கூறி, “கல்லூர்ப் பெருமணம்எனத் தொடங்கும் பதிகம் பாடி, சிவனின் திருவடியில் சேரும் நினைவோடு இறைவனை வழிபட்டார். அப்போது எல்லாம் வல்ல ஈசன் ஜோதிப்பிழம்பாக தோன்றி, “நீயும் உனது மனைவியும் திருமணம் காண வந்தோர் அனைவரும் இந்த ஜோதியில் கலந்து விடுகஎன்று அருள்புரிந்தார்.