Category Archives: திருமால் ஆலயங்கள்

அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருப்பதி சாரம்

அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருப்பதி சாரம் – 629 901, நாகர் கோவில் கன்னியாகுமரி மாவட்டம்.

+91-94424 27710 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருவாழ்மார்பன்
உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசன்
தாயார் கமல வல்லி நாச்சியார்,சுவாமி மார்பில் மகாலட்சுமி
தீர்த்தம் லட்சுமி தீர்த்தம் என்ற புஷ்கரிணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவண்பரிசாரம்
ஊர் திருப்பதிசாரம்
மாவட்டம் கன்னியாகுமரி
மாநிலம் தமிழ்நாடு

ஒரு காலத்தில் சுசீந்திரம், ஞானாரண்யம் என அழைக்கப்பட்டது. சப்தரிஷிகள் இங்கு தவமிருந்தனர். இறைவன் சிவவடிவில் அவர்களுக்குக் காட்சி தந்தார். முனிவர்கள் இறைவனைத் திருமாலின் உருவிலேயே காண, சோம தீர்த்தக் கட்டம் என்ற இடத்திற்கு சென்று தவம் செய்தனர். அவர்களது தவத்துக்கு இரங்கிய இறைவன், திருமாலின் உருவில் காட்சி தந்தார். அவ்வுருவில் அங்கு தங்கியருள வேண்டும் என்ற முனிவர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற, திருமால், சப்தரிஷிகள் சூழ, பிரசன்ன மூர்த்தியாக சுமர்ந்து அருள்புரிகின்றார் என்பர்.

அருள்மிகு திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில், திருவட்டாறு

அருள்மிகு திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில், திருவட்டாறு-629 177. கன்னியாகுமரி மாவட்டம்.

+91- 94425 77047 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆதிகேசவப் பெருமாள்
தாயார் மரகதவல்லி நாச்சியார்
தீர்த்தம் கடல் வாய் தீர்த்தம், வாட்டாறு, ராம தீர்த்தம்
பழமை 2000-3000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவட்டாறு
மாவட்டம் கன்னியாகுமரி
மாநிலம் தமிழ்நாடு

பிரம்மா யாகம் நடத்திய போது ஏற்பட்ட தவறால், யாக குண்டத்தில் இருந்து கேசன், கேசி என்ற அரக்கர்கள் தோன்றினர். இவர்களால் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் கேசனை அழித்து, கேசியின் மேல் சயனம் கொண்டார். கேசியின் மனைவி பெருமாளைப் பழிவாங்கும் நோக்கத்துடன், கங்கையையும், தாமிரபரணியையும் துணைக்கு அழைக்க, அவர்கள் இருவரும் வேகமாக ஓடி வந்தனர். இதையறிந்த பூமாதேவி திருமால் சயனித்திருக்கும் பகுதியை மேடாக்கினாள். அவர்கள், திருமால் இருந்த இடத்தை சுற்றி வணங்கி, இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தனர். இதனால் இத்தலம் வட்டாறுஎன அழைக்கப்பட்டது. இரு நதிகளும் பெருமாளுக்கு மாலை சூட்டியது போல் இருப்பதைக்கண்ட நம்மாழ்வார், “மாலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான்எனப் பாடுகிறார். கேசனை அழித்ததால் இத்தல பெருமாள் கேசவப்பெருமாள் எனப்படுகிறார். கேசியின் மீது சயனித்த போது, அவன் தன் 12 கைகளால் தப்புவதற்கு முயற்சி செய்தான். பெருமாள் அவனது 12 கைகளிலும் 12 ருத்ராட்சங்களை வைத்து தப்பிக்க விடாமல் செய்தார். இவையே திருவட்டாரை சுற்றி சிவாலயங்களாக அமைந்தன.(இது வைணவர்களின்கூற்று. சைவர்களின் கதையோ வேறு). மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் 12 சிவாலயங்களையும், ஓடியவாறு தரிசித்து, கடைசியில் ஆதிகேசவப் பெருமாளையும், அவர் பாதத்தின் கீழ் உள்ள சிவனையும் தரிசிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.