Category Archives: பாடல் பெற்றவை

பிரளயகாலேஸ்வரர் கோயில், பெண்ணாடம்

அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் கோயில், பெண்ணாடம், கடலூர் மாவட்டம்.

+91- 4143-222 788, 98425 64768

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி 9 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரளயகாலேஸ்வரர் (சுடர்க்கொழுந்துநாதர்)
அம்மன் அழகிய காதலி (ஆமோதனாம்பாள், கடந்தை நாயகி)
தல விருட்சம் செண்பகம்
தீர்த்தம் கயிலை தீர்த்தம், பார்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம், முக்குளம், வெள்ளாறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பெண்ணாகடம்
ஊர் பெண்ணாடம்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

ஒருமுறை தேவலோகத்தில் சிவபூஜை செய்ய, பூலோகத்து பூக்கள் தேவைப்பட்டது. தேவகன்னியர் இருவரை தேவேந்திரன் பூலோகத்திற்கு அனுப்பி, பூக்களை பறித்து வரச் சொன்னான். பூமிக்கு வந்த கன்னியர்கள் ஒரு நந்தவனத்தில் பூக்கள் இருப்பதைக் கண்டு அதை பறிக்கச் செல்கிறார்கள். அங்கிருந்த சிவலிங்கத்தைக் கண்டதும் பக்தியால் ஈர்க்கப்பட்டு, பறித்த பூக்களை அவருக்கு பூஜை செய்து அங்கேயே தங்கி விட்டனர். கன்னியரைக் காணாத இந்திரன் அவர்களை அழைத்து வர காமதேனு பசுவை அனுப்பினார். அது பூலோகம் வந்ததும் கன்னியர் செய்யும் பூஜையைக்கண்டு தானும் அவர்களுடன் சேர்ந்து ஈசனுக்குப் பால் அபஷேகம் செய்து, அங்கேயே தங்கி விட்டது.

மீண்டும், தன் ஐராவத வெள்ளையானையை அனுப்பினான் இந்திரன். யானை, பூமியில் இவர்கள் செய்யும் பூஜையைப் பார்த்து விட்டு தானும் தன் பங்கிற்கு, திறந்தவெளியில் இருந்த சிவலிங்கத்தை மறைத்து நின்று, வெயில் படாமல் பார்த்து கொண்டது. பொறுமை இழந்த இந்திரன் பூமிக்கு வந்துவிட்டான். தன்னால் அனுப்பபட்டவர்கள் அனைவரும் சிவபூஜை செய்வதை பார்த்து, அவனும் பூஜை செய்ய ஆரம்பத்து விட்டான். சிவனருள் பெற்று அனைவருடனும் தேவலோகம் சென்றான்.

திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை

அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை, திருவரத்துறை, கடலூர் மாவட்டம்.

+91-4143-246 467

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தீர்த்தபுரீஸ்வரர், ஆனந்தீஸ்வரர்
அம்மன் திரிபுர சுந்தரி
தல விருட்சம் ஆலமரம்
தீர்த்தம் நீலமலர்ப்பொய்கை, வட வெள்ளாறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநெல்வாயில் அரத்துறை, நெல்வாயில் அருத்துறை
ஊர் திருவட்டத்துறை
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், ஆதிசங்கரர், குகை நமச்சிவாயர், ராமலிங்க அடிகள்

வெள்ளாற்றின் கரையில் உள்ள ஆதித்துறை(காரியனூர்), திருவாலந்துறை, திருமாந்துறை, திருஆடுதுறை, திருவட்டத்துறை (திட்டக்குடி), திருநெல்வாயில் அரத்துறை, திருக்கரந்துறை எனும் ஏழு துறைத்தலங்களுள் இது முக்கியமான தலம்.

இந்த ஏழு புண்ணியத்துறைகளில் மக்களின் பாவங்களை நீக்க இறைவன் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. இந்த ஏழு துறைகளையும் சப்தரிஷிகள் பூஜை செய்ய வேண்டி நீவாஎன்று அழைத்ததாக ஐதீகம். இதுவே நீவாவடவெள்ளாறுநதியாக மாறியது என்றும் கூறுவர்.