Category Archives: பாடல் பெறாதவை

ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில், திருவொற்றியூர்

அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில், திருவொற்றியூர் – 600 019 சென்னை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆதிபுரீஸ்வரர்
தீர்த்தம் பிரம்மதீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஆதிபுரி
ஊர் திருவொற்றியூர்
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

வைகுண்டத்தில் எம்பெருமானின் நாபிக்கமலத்திலிருந்து பிறந்த பிரம்மன் உலகைப் படைக்க துவங்கினார். அதற்கு முன்னதாகவே இந்த உலகில் ஒருநகரம் அமைந்திருந்தது. “நான் உலகைப் படைக்கும் முன் இந்த நகரத்தைப் படைத்தது யார்? எனக்கும் மேலே ஒருவரா? யார் அவர்என்று பரந்தாமனிடம் கேட்டார்.

ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், பரங்கிப்பேட்டை

அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம்.

+91- 99527 56295, 98404 56057

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

aathimooleswarar_koil_parangippettai

மூலவர் ஆதிமூலேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் அமிர்தவல்லி
தல விருட்சம் வில்வம், வன்னி
தீர்த்தம் வருண தீர்த்தம்
ஆகமம்/பூஜை காமீகம், காரணாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வருண க்ஷேத்ரம்
ஊர் பரங்கிப்பேட்டை
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

என்றும் பதினாறு வயதுடையவராக இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றது போல, என்றும் 12 வயதுடையவராக இருக்க சித்திரகுப்தர் வரம் பெற்ற தலம் பரங்கிப்பேட்டையில் ஆதிமூலேஸ்வரர் கோயிலாகும்.

காசியப முனிவர் ஒருசமயம் சிவனை வேண்டி யாகம் நடத்தியபோது, வருணன் மழையைப் பொழிவித்தான். இதனால் அவரிடம் சாபம் பெற்று தன் சக்தியை இழந்தான். இழந்த சக்தி மீண்டும் கிடைக்க, சிவனை வேண்டினான். வருணனுக்கு அருள்புரிந்த சிவன், அவனது வேண்டுதலுக்காக            இங்கே எழுந்தருளினார். இவருக்கு “ஆதிமூலேஸ்வரர்” என்ற பெயர் ஏற்பட்டது.