Category Archives: சக்தி ஆலயங்கள்

அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில், மாகாளிக்குடி

அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில், மாகாளிக்குடி, சமயபுரம், திருச்சி மாவட்டம்.

+91-431 267 0860, 267 0460, 98424 02999 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காளியம்மன், ஆனந்தசவுபாக்கிய சுந்தரி
உற்சவர் அழகம்மை
தல விருட்சம் மகிழ மரம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் மாகாளிக்குடி
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

மத்திய பிரதேசம் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் விக்ரமாதித்தன். காட்டில் ஆறு மாதமும், நாட்டில் ஆறு மாதமும் ஆட்சி செய்வது வழக்கம். இவரது குலதெய்வம் உஜ்ஜயினி மாகாளி. இவளைத்தான் தமிழகத்தில் உச்சினி மாகாளி, உச்சிமாகாளிஎன்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

ஒரு சமயம் காட்டில் ஆட்சி செய்ய, காவிரிக்கரையிலுள்ள மகாகாளிகுடி காட்டுக்கு, தான் வழிபட்ட காளி சிலையுடன் வந்தார். இங்கே தங்கிப் பூசை செய்து கொண்டிருந்தார். அவர் நாடு திரும்பும்போது, தான் வழிபட்ட சிலையை எடுக்க முயன்றார். முடியவில்லை. அம்பாளைத் தன்னுடன் வரும்படி எவ்வளவோ கெஞ்சினார். அப்போது அவர் முன் தோன்றிய காளி, இந்த இடத்திலும் தனது சக்தி தங்கும் என்று கூறி விட்டாள். அதைத் தொடர்ந்து அம்பாளுக்கு கோயில் கட்டி வழிபாட்டை துவக்கினார்.

ஒருநாள் காளி, “இங்கிருந்து 2 கல் தொலைவில் ஒரு சிவாலயம் உள்ளது. அந்த சிவன் கோயிலில் உள்ள முருங்கை மரத்தில் ஒரு வேதாளம் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை நீ கீழே இறக்கினால் அது உனக்கு 32 கதைகளைச் சொல்லும். அதைவென்று அடிமைப்படுத்தினால், உனக்கு எல்லா உதவிகளையும் செய்யும். அதன்படி நீ நடந்தால் உனக்கு உன்னத பதவி கிடைக்கும்எனக் கூறி மறைந்தாள்.

வேதாளமும் விக்கிரமாதித்தனும்கதை நடந்த தலம் இதுதான் என்கின்றனர்.

அருள்மிகு திரவுபதி அம்மன் கோயில், ஐவர் மலை

அருள்மிகு திரவுபதி அம்மன் கோயில், ஐவர் மலை, பழநி, திண்டுக்கல் மாவட்டம்.

+91- 4545 – 260417 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 6.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திரவுபதி(பாஞ்சாலி)
தல விருட்சம் வன்னி, வேம்பு
தீர்த்தம் சூரிய புஷ்கரிணி, சந்திரபுஷ்கரிணி
முருகனுக்கு தனியாக பால்சுனை
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்பு
ஊர் ஐவர்மலை
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

பஞ்சபாண்டவர்கள், தங்களின் வன வாசத்தின்போது பாஞ்சாலியுடன் இந்த ஐவர் மலையிலும் வசித்ததாக கூறுகிறார்கள். இதனால்தான் இந்த மலை ஐவர் மலை என அழைக்கப்படுகிறது. “ஐவர் மலை இல்லை “ஆயிர” மலை என்பது தான் ஐவர் மலையில்உள்ள கல்வெட்டு கூறும் தகவல்” என்கிறார் ஒரு நண்பர்.

மேலும் பழனி மலை முருகன் சிலையை நவ பாஷாணத்தால் உருவாக்கியவரான போகர் இங்கிருந்து தான் முருகன் சிலையை செய்துள்ளார். அதாவது போகருக்கு பிரம்மகத்தி தோடம் பிடித்துக்கொண்டது. இந்த தோசம் போக போகர் வேள்வி ஒன்று நடத்துகிறார். வேள்வியின் முடிவில் புவனேசுவரி அம்மன் தோன்றி, இந்த தோசம் போக வேண்டுமானால் நவபாஷாணத்தினால் ஆன முருகன் சிலை ஒன்று செய்து, அந்த முருகன் சிலையைப் பழனியில் வைத்து வழிபடும்படி கூறினாள். போகரும் இந்த பொறுப்பைத் தனது சீடரான புலிப்பாணியிடம் ஒப்படைத்தார்.