Category Archives: சக்தி ஆலயங்கள்

அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர்

அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சி மாவட்டம்.

+91 431 2761 869 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வெக்காளி அம்மன்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்பு
புராணப் பெயர் கோழியூர்
ஊர் உறையூர்
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

பராந்தக சோழன், உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ தேசத்தை ஆண்டு வந்தான். அவனது ராஜகுரு சாரமா முனிவர். இவர் மிகப்பெரிய சிவபக்தர். திருச்சி மலைக்கோட்டையில் ஒரு நந்தவனத்தை உருவாக்கி, தாயுமான சுவாமிக்கு பூசை செய்து வந்தார்.

இறைவனுக்காக, அந்த நந்தவனத்தில் ஏராளமான பூச்செடிகளை வளர்த்தார். ஆனால் மன்னன் பராந்தகசோழன் தனது மனைவி புவனமாதேவியின் கூந்தலில் சூட, அந்த பூக்களைப் பறித்து சென்றான். சாரமா முனிவரின் அனுமதி பெறாமலேயே, தினமும் அர்சனின் ஆட்கள் நந்தவனத்திற்கு வந்து பூக்களைப் பறித்துச் சென்றனர். இதை அறிந்த முனிவர், மன்னனிடம் சென்று,”மன்னா. நாடுகாக்கும் தாங்களே இப்படி மலர்களை பறித்துச் செல்வது முறையாஎன முறையிட்டார்.

மன்னர், முனிவரின் பேச்சை மதிக்கவே இல்லை.

அருள்மிகு வீரமனோகரி(காளி) திருக்கோயில், குலசேகரன் பட்டினம்

அருள்மிகு வீரமனோகரி(காளி) திருக்கோயில், குலசேகரன் பட்டினம், கன்னியாகுமரி மாவட்டம்

முருகப்பெருமான் திருச்செந்தூரில் பத்மாசுரனை எதிர்த்த போது, யானைமுகம் கொண்ட அவனது சகோதரன் முருகனுடன் போரிட்டான். வெற்றிவேலை எய்து அவன் தலையைக் கொய்தார் முருகப்பெருமான். ஆனைத்தலை விழுந்த இடம் ஆலந்தலைஎன்று மருவி விட்டது. இவ்வூர் திருச்செந்தூருக்கு அருகில் 3கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சிங்கமுக அசுரனையும் கல்லாமொழிஎன்னுமிடத்தில் வெற்றி கொண்டார். அக்காலத்தில் கல்லால மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. இப்போது அவ்வூர் காயாமொழிஎனப்படுகிறது.

தன் உடன்பிறந்தவர்கள் இருவரையும் கொன்ற முருகனை மிக ஆவேசத்துடன் போருக்கு அழைத்தான் சூரபத்மன். சீறி வரும் பகையைத் தன் சிரிப்பால் அடக்கிடும் முருகப்பெருமான் வெற்றிப் புன்னகையுடன் வேலை சூரனின் மீது விடுத்தார். வேலால் குத்தப்பட்ட சூரனின் உடலிலிருந்து குருதி சிந்தியது. அசுரனின் ரத்தம் பூமியில் பட்டால் பூமாதேவியின் பொறுமை குணம் மாறிவிடும் என்று எண்ணி, முருகன் காளி தேவியை வேண்டினார். காளி உடனே வந்து சூரபத்மனின் ரத்தத்தைக் குடித்து வீரமனோகரிஎன்ற திருநாமத்துடன் அமர்ந்தாள்.

அவ்விடமே திருச்செந்தூரிலிருந்து 11கி.மீ. தொலைவில் அமைந்த குலசேகரன் பட்டினம் ஆகும். தீயவர்களை அழித்து, நல்லவர்களைக் காக்கும் நோக்கில் இவ்விடத்தில் காளி வீரமனோகரியாக வீற்றிருக்கிறாள்.