அருள்மிகு வீரமனோகரி(காளி) திருக்கோயில், குலசேகரன் பட்டினம்

அருள்மிகு வீரமனோகரி(காளி) திருக்கோயில், குலசேகரன் பட்டினம், கன்னியாகுமரி மாவட்டம்

முருகப்பெருமான் திருச்செந்தூரில் பத்மாசுரனை எதிர்த்த போது, யானைமுகம் கொண்ட அவனது சகோதரன் முருகனுடன் போரிட்டான். வெற்றிவேலை எய்து அவன் தலையைக் கொய்தார் முருகப்பெருமான். ஆனைத்தலை விழுந்த இடம் ஆலந்தலைஎன்று மருவி விட்டது. இவ்வூர் திருச்செந்தூருக்கு அருகில் 3கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சிங்கமுக அசுரனையும் கல்லாமொழிஎன்னுமிடத்தில் வெற்றி கொண்டார். அக்காலத்தில் கல்லால மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. இப்போது அவ்வூர் காயாமொழிஎனப்படுகிறது.

தன் உடன்பிறந்தவர்கள் இருவரையும் கொன்ற முருகனை மிக ஆவேசத்துடன் போருக்கு அழைத்தான் சூரபத்மன். சீறி வரும் பகையைத் தன் சிரிப்பால் அடக்கிடும் முருகப்பெருமான் வெற்றிப் புன்னகையுடன் வேலை சூரனின் மீது விடுத்தார். வேலால் குத்தப்பட்ட சூரனின் உடலிலிருந்து குருதி சிந்தியது. அசுரனின் ரத்தம் பூமியில் பட்டால் பூமாதேவியின் பொறுமை குணம் மாறிவிடும் என்று எண்ணி, முருகன் காளி தேவியை வேண்டினார். காளி உடனே வந்து சூரபத்மனின் ரத்தத்தைக் குடித்து வீரமனோகரிஎன்ற திருநாமத்துடன் அமர்ந்தாள்.

அவ்விடமே திருச்செந்தூரிலிருந்து 11கி.மீ. தொலைவில் அமைந்த குலசேகரன் பட்டினம் ஆகும். தீயவர்களை அழித்து, நல்லவர்களைக் காக்கும் நோக்கில் இவ்விடத்தில் காளி வீரமனோகரியாக வீற்றிருக்கிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *