முன் ஜென்ம பாவம் விலக
முன் ஜென்ம பாவம் விலக
முன் ஜன்மம் உண்டா? இல்லையா? தெரியாது. அப்படியானால் அந்த ஜன்மத்தில் நாம் பாவம் செய்தது எப்படித் தெரியும்? இவைகளெல்லாம் தெரிந்தால்தானே அந்தந்தப் பாவத்திற்குப் பரிகாரம் தேடமுடியும். அப்பொழுதுதானே பாவம் விலகும். ஆக, இது இயலாத ஒன்று.
“ஜாதகத்தில்தான் கண்ணாடி மதிரித் தெரிகின்றதே! அதற்கு இந்தப் பரிகாரம் செய்யவேண்டும். நான்தான் அதைச் செய்யவேண்டும். இவ்வளவு துகை ஆகும். உடனே கொடுங்கள்” என்று சொல்லும் சோதிடர்களையும் போலி ஆசாமிகளையும் நம்பாதீர்கள்.
பரிகாரம் செய்யவேண்டுமெனப் பணம் செலவு செய்யாதீர்கள். அன்னதானம் செய்யுங்கள். உடை தானம் செய்யுங்கள்.
இதெல்லாம் நம்பும்படியுமில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை என்றால் எல்லாவற்றையும் இறைவன் பொறுப்பில் விட்டுவிட்டு வருவதை எதிர்கொள்வது புத்திசாலித்தனம். கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வணங்கினால் எவ்வகைப்பாவமானாலும் கழிந்துவிடுமென பக்தர்கள் கூறுகின்றனர்.
ஆதிரத்தினேஸ்வரர் | திருவாடானை | இராமநாதபுரம் |
அட்டாள சொக்கநாதர் | மேலப்பெருங்கரை | இராமநாதபுரம் |
நவபாஷாண நவக்கிரகங்கள் | தேவிபட்டிணம் | இராமநாதபுரம் |
கசவனம்பட்டி |
திண்டுக்கல் |
|
திருக்கரையீஸ்வரர் | பெரணமல்லூர் | திருவண்ணாமலை |
சுந்தரேஸ்வரர் | அன்னப்பன்பேட்டை (திருக்கலிக்காமூர்) | நாகப்பட்டினம் |
ஆரண்யேஸ்வரர் | திருக்காட்டுப்பள்ளி | நாகப்பட்டினம் |
காயாரோகணேஸ்வரர் | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் |
அசலதீபேஸ்வரர் | மோகனூர் | நாமக்கல் |
நஞ்சுண்டேஸ்வரர் | நஞ்சன்கூடு | மைசூரு |
Leave a Reply